பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

கற்பனா சக்தியும், திறனும், உழைப்பும், சாதாரண ஒரு மனிதனைவிட, அளவில் அதிகமானதாக யாருக்கு அமை கின்றதோ, அவனே அற்புதக் கலைஞனாகத் திகழ முடியும்.

பத்து ரூபாயை வைத்திருப்பவன் ஒரு ரூபாய் வைத்திருப் பவனை விட உயர்ந்தவனாகிறான்.

பத்து ரூபாய் என்ற பொருளாதார நிலை உயரும்போது, அதற்கேற்ப, அவன் நினைப்பும் நிலையும் உயர்ந்து விடுவதை, நாம் பலரிடையே பார்த்திருக்கின்றோம் அல்லவா?

எவரும், எப்போதும் பெற முடிகின்ற பொருளுக்கே இந்த உயர்வு தாழ்வு ஏற்படுகின்றதென்றால், கலைஞனுக்கென குறிப்பிட்டக் கற்பனை சக்தியுடன் கூடிய நெடிய உழைப்பும், திறனுமுடைய ஒருவன், பல கோடியில் ஒருவனாகத் தான்் இருக்க முடியும்.

அத்தகையக் கலைஞர்களால், பொதுமக்கள் தங்களது ஒய்வு நேரத்தைப் பொற்காலமாக்கிக் கொள்கின்றார்கள்.

அவர்கள், கலைஞர்களை மதிக்காமல், பாராட்டாமல், வாழ்த்தாமல், சமுதாயத்திலே வாழ்கின்ற பல்வேறு வகையான திறமையானவர்களைவிட அதிகமாகப் புகழாமல் வேறு என்ன செய்வார்கள்?

எனவே, அரிய திறன் பெற்ற கலைஞர்கள், மக்களி டையே காட்சிப் பொருளாய் இருப்பதிலும், வியப்பில்லை.

அப்பொருட்களைக் காண, பொது மக்கள் துடியாய் துடித்து மோதியடித்துக் கொண்டு ஓடுவதிலும் ஆச்சரிய மில்லை.

கோழி கூவியபோது, விழித்தெழுந்து, கோட்டான் கூவும் வரை உழைத்துழைத்துத் துவண்டு போகின்றவர்களது உடல்கள், குடும்ப பாரத்தால் சோர்ந்து போன உள்ளங்கள் மீண்டும் புத்துணர்வு பெற்று வாழ்க்கையில் புளகாங்கிதம் பெற, பழைய முறுக்கேற, அவர்கட்கு நாடகமோ, நாட்டிய மோ, சினிமாவோ, இசையோ, வேறு என்ன கலையோ ஒன்று தேவைப்படுகின்றது: