பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். இந்த விதிவிலக்கை பொன்மனச் செம்மல் எவ்வாறு பெற்றார் என்று அறியப் புகுமுன், வலிமை பொருந்திய சரித்திரச் சான்றுகள் சிலவற்றை நாம் காணவேண்டியது இன்றியமையாததாகும்:

தத்துவ ஞானி சாக்ரடீசினுடைய சிந்தனைத் தொடரலை கள், அரசியல் வித்தகன் பிளேட்டோவால் ஊடுருவப் பெற்று, சகலகலாவல்லன் அரிஸ்டாட்டலால் எவ்வாறு முற்றுப் பெறுகின்றதோ,

கனவுக் கலைக் கலைஞன் சிக்மண்ட் ப்ராய்டு"வினுடைய மனோ தத்துவ அலைகள், அறிஞன் ஜங் என்பவனால் எங்ஙனம் முடிவடைகின்றதோ!

பொதுவுடைமைப் புலவன் ஏஞ்சல்சினுடைய பொருளா தாரத் தத்துவங்கள், சமதர்ம ஞானி காரல் மார்க்ஸ் வழியாக ஊடுருவி, சோவியத் சிற்பி லெனினால் எப்படி இறுதியுற்றதோ,

அடிமைகளுடைய விலங்கை நொறுக்குவதற்காக மனித சுதந்திர வீரன் ஆப்ரகாம் லிங்கனால் ஊற்றெடுக்கப்பட்ட ஜனநாயகத் தத்துவங்கள், எப்படி மனித சமத்துவச் சிற்பியான கென்னடியால் ஆறாக பெருகி ஓடியதோ:

அதனைப் போலவே, கலை உலகத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் வண்மை, பண்பு, அறம், பொது மக்கள் தொடர்பு, ஏழைகளைக் கவனிக்கும் உருக்க நோக்கு, அன்பு, தன் நிலை அறிதல், தன் நலம் தவிர்த்தல், பொது நலம் பேணல், அரசியல் தெளிவால் மின்னுதல், இவையனைத்தும் எம்.ஜி.ஆர். என்ற பேருழைப்பின் சின்னம் வாயிலாகப் பொது மக்களுக்கு ஆற்றப்படும் பொழுது, கலைவாணருடைய இறவா வரம் பெற்ற உணர்வுகள்; மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களால் காப்பாற்றபடுகின்றன என்று பொருளாகும்.

நல்ல நோக்குடைய ஒருவன், ஒரு மரத்தைப் பார்த்தான்ே யானால், மரத்தின் வண்ணத்தைச் சொல்வான்! பெயரைக் கூறுவான்! கனியின் தன்மையைக் கழறுவான். அது கனியும் காலத்தைச் சாற்றுவான், பயிரிடும் முறையைப் பகருவான்.