பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 3?

பார்வையில் தெளிவில்லாதவன், அதன் அருகிலிருந் தாலும்கூட, இது மரம் என்று சொல்லிவிட்டுப் போய் விடுவான்.

அதுபோல, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரைப் பார்க்கும் போது, நல்ல நோக்குடைய நமக்கெல்லாம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரை மட்டுமே தெரியவில்லை.

அவருக்குப் பின்னாலே இருக்கின்ற கலைவாணரையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.

'என் கால் சுடுகின்றது. எனக்குச் செருப்பில்லை. இரு ஜோடிகள் அவனிடம் இருப்பானேன்!?’ என்று எவனாவது கேட்பானேயானால், கேள்வியை எழுப்பியவன் பின்னாலே பொதுவுடைமைவாதிகள் மார்க்சும் ஏஞ்சல்சும் இருக் கின்றார்கள் என்று பொருள்!

நான் யாருக்கும் அடிமை இல்லை. அதனாலே நான் எசமானனும் இல்லை” என்று யாராவது கூறுவானேயானால், அவன் பின்னாலே ஆபிரகாம் லிங்கன் இருக்கிறான் என்பது அர்த்தம்!

மாண்டிசோரியின், 'குழந்தைமை ரகசியம்' என்ற நூலை படிக்கும்போது, மாண்டிசோரி மட்டும் நமக்குத் தெரியவில்லை. அவருக்குப் பின்னாலே இருக்கின்ற பிராய்டு, ஜங் போன்ற பேரறிஞர்களும் புரிகின்றார்கள்!

கற்றோர் அவையிலே ஒருவன் தனது வாதத் திறமையைக் காட்ட ஆரம்பித்தால், வினா எழுப்பியவனையே விடையிறுக்க வைத்தால், தெளிவு பெற வந்தவனையே கேள்வி கேட்டு, அவன் வாயாலேயே விளக்கம் பெறச் செய்தால், அத்தகையவனுக்குப் பின்னாலே தத்துவமேதைகள், மெய்கண்டார், சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் நால் வரும் உள்ளார்கள் என்பதை நம்மால் காண முடிகின்றது.

அதனைப் போல, பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். பொறாமை என்ற பெரு நோயிலிருந்து விதிவிலக்குப் பெற்றவர் என்று நாம் நினைக்கும்போது, வாரி வாரி வழங்கும் வள்ளல் என்று நாம் அவரைப் போற்றுகின்றபோது :