பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8: மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

இரக்கத்தின் தாய்! அறத்தின் திக்கு:

நீதியின் நிழல்:

தேர்மையின் தொகுப்பு!

என்று அவரைப் பாராட்டும் நேரத்தில், எம்.ஜி.ஆருக்குப் பின்னாலே அவரது கலை உலக மூத்த சகோதரர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் இருந்தார் என்று பொருளாகும்.

எந்த ஆசிரியரிடத்தில் ஒரு மாணவன் படித்தாலும் அதே ஆசிரியனுடைய பண்பு ஓரளவாகிலும், மாணவனுக்குள் திகழ்வதை நாம் பார்க்கலாம். அதை ஆங்கிலத்தில் School of Trghts என்று குறிப்பிடுவார்கள்.

செந்தமிழ் வேளிர், எம்.ஜி.ஆருடைய பரிந்தோம்பும் பண்பு, அன்பு சுரக்கும் தன்மை, ஈத்துவக்கும் ஈகை இவையனைத்தும் அவர் ஒர் ஆசிரியரிடத்தில் பெற்ற சாயல்களைக் காட்டுகின்றன:

'பிறருக்கு நன்மை செய்பவர்கள். தாம் என்றும் நலமாய் £5.1 stiãsir”, “Only those live who do good grgårps Jayu offsaf டால்ஸ்டாய் 10istoy கூறிய அற உரைக்கு எம்.ஜி.ஆர். ஓர் எடுத்துக்காட்டாக நடமாடினார்.

கலைவாணர் ஒரு கலைக் கூட்டத்தை வைத்தே உண வளித்தார்: எம்.ஜி.ஆர். கலைவாணரைப் போல தினந்தோறும் எண்ணற்றோருக்குப் பசியறிந்து புசிக்க உண்டியளித்தார்:

உணவளித்தது மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான தரித்திர நாராயணப் பழங் கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் மாத ஊதியமும் தனது சொந்த பணத்திலே கொடுத்தார்!

தனது இல்லம். இருக்கும் இராமாவரம் தோட்டத்தில் உணவு சமைத்திட, பரிமாற, காய்கறி வாங்கி வர, இறைச்சி மீன் வகைகள் இறக்குமதியாக, ஒரு மடப்படையே இருந்தது. எந்த நடிகரிடமும் இன்று வரை இந்த சோற்றுப்படை இருந்ததில்லை!