பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 85

எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துக்குத் திரை உலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி, மக்கள் மத்தியிலேயும் சரி, தமிழகத்தைப் பொறுத்த மட்டில் மட்டுமன்று, இந்தியாவில் கூட, இதற்கு முன்பு வேறு எவருக்குமே இருந்ததில்லை என்பது வெள்ளிடை மலை.

காலம் எப்படிப்பட்ட மாறுதலைச் செய்தாலும் சரி, கலைவாணர் எம்.ஜி.ஆர். என்ற இந்த இரு வள்ளல்கள் திரை உலகிற்கும், சமுதாயத்திற்கும் ஆற்றிய வண்மையை ஒரு போதும் நாடு மறவாது!

வள்ளண்மை என்ற வார்த்தை இருக்கும்வரை இந்த இருபெரும் நடிக மன்னர்களின் பெயரும் நீடு புகழோடு வாழும்! - வளரும்!

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். கலை உலகத்திலே, காலெடுத்து வைத்தால் போதும் பெரும் பணக்காரர்கள் முதல் படாதிபதிகள் வரை, ஏழைத் தொழிலாளிகள் முதல் கலைத் தொழில் நிபுணர்கள் வரை, ஏதோ ஒரு பாசத்தால் ஆக்ரமிக்கப் பட்டவர்களைப் போல பாசம் காட்டும் பண்பு வளர்ந்து வந்ததைக் கண்டோம்!

அதே நிலை மக்கள் மன்றத்திலும், அவருக்கு நிலவியது என்றால் என்ன பொருள்?

மக்கள் திலகம் அரசியல் அரங்கில் கலந்து கொள்கிறார் என்றால், அங்கே பொது மக்களது பெருங்கட்டமும், ஆரவாரமும், கடல்போல் பெருகி ஆர்ப்பரிக்கும் களிப்பும் திரையுலகையே திக்கு முக்காடச் செய்தது - அடே... யப்பா! எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே இத்துணை பெரும் செல்வாக்கா என்று!

சமுதாயத் துறையிலே அவர் ஆற்றி வந்த சேவை அரசியல்வாதிகளுக்கே ஓர் அறை கூவலாக அமைந்தது.

வாரி வழங்கும் வளமான பண்பு, அறநெறி உதவிகள், வாழ்க்கைப் புயலால் உருவாகும் அன்றாட வேதனைச் சம்பவங்களைப் போக்கும் செயல்கள் ஆகியவை, எந்த ஒர்