பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். அரசியல்வாதியாலும், இதுவரை ஆற்ற முடியாத அளவுக்கு எம்.ஜி.ஆர். தனியொருவராக நின்று ஆற்றினார்:

இதனால், அரசியலரங்கிலும், கலையரங்கிலும்கூட அவர்மீது அழுக்காறு கொள்ளும் காழ்ப்புத் தன்மை மனித இயல்பாகவே ஏற்பட்டது.

மூன்றுவேளைகள் உண்டு. வெள்ளை மாறாமல் உடைகள் உடுத்தி, அவன் வேலையை அவன் பார்த்துக் கொண்டிருந்தால்கூட, முன்பின் தெரியாத ஒருவனுக்கு திடீரெனப் பொறாமை ஏற்படுவது உண்டு!

என்ன குற்றத்தை அவன்மீது கூறினால் நாடு நம்பும் என்று ஆராய்ச்சி செய்து, இறுதியில் ஏதாவதொரு குற்றத்தைக் கூறி, அவன் புகழை, ஏன் அவனையே அழிக்க நினைப்பது மனிதனின் தீய இயல்பாகும்!

இதை அறிந்துதான்ே திருவள்ளுவர்

உடுப்பது உம் உண்பது உம் காணின் பிறர்மேல் வடுக்கான வற்றசகுங் கீழ் - என்றார்

கலை உலக எதிர்கட்சி எதிரிகள் சிலர், எம்.ஜி.ஆர். புகழைக் குறைத்து நாட்டிலே அவரைச் செல்வாக்கற்று ஒழித்து விடலாம் என்று நினைத்தார்கள்! காலம் அதற்கு பதில் கூறிவிட்டது.

அதன் எதிரொலிதான்், அவருடைய அரசியல், கலை உலக எதிரி ஒருவர், வீடு தேடிச் சென்று, பொன்மனச் செம்மலைக் கொல்ல நினைத்து, துப்பாக்கியல் சுட்ட சம்பவம்:

அப்போது நாடே கொதித்து எழுந்தது! சுட்டவரை போலீஸ் பிடித்தது! மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டு தொண்டையில் அறுவை சிகிச்சை நடந்து, புரட்சி நடிகர் சுகம் பெற்று மீண்டார்!

'தன்னை உணர்ந்தவன் தரணியை வெல்வான்' என்ற தத்துவத்திற்கேற்ப, எவர் எந்த புகார்களைக் கூறினாலும், அடுத்துக் கெடுத்தாலும் நம்பிக்கைத் துரோகம் புரிந்தாலும்,