பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

BĚ மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

அத்தகைய நடிகர் ஜெரி லூயிஸ்தான்், ஆண்டொன்றுக்கு ஏழை மக்களுக்காகப் பத்து மில்லியன் டாலர் பணம் உதவி செய்தார்! பத்து மில்லியன் என்றால் ஒரு கோடி ரூபாய்க்கு சமமாகும்.

அம்ரி டோகாட் என்ற மற்றொரு நடிகர், அமெரிக்காவில் பல இலட்ச ரூபாயில் ஏழை மக்களுக்காக ஒரு புற்று நோய் மருத்துவமனையைக் கட்டினார்.

இந்த இருபெரும் நடிகர்களைப் போலவே, ஏழை பங்காளர் எம்.ஜி.ஆர். அவர்கள், சென்னையிலே உள்ள சாலிக்கிராமம் அருகே, லட்சக்கணக்கான ரூபாயில் தன் தாயின் பெயரில் ஒரு மருத்துவமனையைக் கட்டி ஏழை மக்களுக்காக நடத்தினார்:

அமெரிக்க நடிகர் திலகமான மார்லன் பிராண்டோ என்ற நடிகர், நீக்ரோ மக்களது உரிமைகளுக்காகப் போராடிய மாவீரர்:

அவர் ஆப்ரகாம் லிங்கன் மெமோரியலிலிருந்து வாஷிங்டன் மாநகர் வரை கிரேட் மார்ச் என்ற பேரணியைத் தனது போராட்டத்தின் அறிகுறியாக நடத்திக் காட்டினார்!

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள், மார்லன் பிராண் டோவைப் போல நேரடிப் போரட்டத்தில் ஈடுபட்டாரா என்று அவசரக்காரர்களும், ஆத்திரக்காரர்களும் கேட்டார்கள்!

அதற்குக் காரணம், அறிஞர் அண்ணா அவர்கள், 'கலைஞர்களும், வழக்குரைஞர்களும், டாக்டர்களும் போராட் டத்தில் ஈடுபடக்கூடாது' என்று தனது கட்சியின் சார்பாக ஒரு தீர்மானம் போட்டு விதிவிலக்கு அளித்திருந்தார்.

என்றாலும், மக்களன்பர் எம்.ஜி.ஆர்., போராட்ட நேரங் களில் தனது ஆதரவை, கருப்பு துணிகளாலான கொடியைத் தனது கட்டிடங்களிலே பறக்கவிட்டு தனது எதிர்ப்பை அண்டயாளம் காட்டினார்.

பிரிட்டன் நாட்டின் நடிகரான மாரியஸ் கோரியஸ் என்பவர், தென் ஆப்ரிக்க நிறவெறியை எதிர்த்து, 'அந்த