பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 83

நாட்டின் எந்தவிதக் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வ தில்லை என்று பிரிட்டன் கலை ஆட்டக்காரர்கள் சங்கத்திலே தீர்மானம் போடப்பட்டதை ஆதரித்தார்.

அதற்கேற்ப, மாரியஸ் கோரியஸ், அறப்போராட்டங் களிலே ஈடுபட்டு, எந்த கலைநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

பிரிட்டன் நாட்டுக் குடிமக்களாகிய அந்த நடிகர்கள், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போக்குக்கு ஆதரவு காட்டும் வகை யிலும், தென் ஆப்ரிக்க நிறவெறியைக் கண்டிக்கும் நிலையிலும் அறப்போராட்டம் புரிந்தனர்!

அதுபோல, இந்திய மண்மீது ஆக்ரமிப்பு வேட்டை நடத்திய சீன வெறியர்களை எதிர்த்து; நாடே திரண்டுப் போர்க்கோலம் சூழ்ந்து நின்றது.

மறைந்த பிரதமர் பண்டித நேரு அவர்கள், சீன ஆக்ரமிப் பாளர்களை எதிர்த்திடப் பொருளுதவி தேவை” என்று, வானொலியில் கல்லும் கனிந்துருகும் வண்ணம் பேசியதை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்டார்.

அப்போதிருந்த தமிழகக் காங்கிரஸ் ஆட்சி, அறிஞர் அண்ணா உட்பட போராட்டத் தலைவர்களை எல்லாம் காராக்கிரகத்திலே தள்ளி வேதனைப்படுத்திய நேரம்!

அண்ணாவின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிறையி லடைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, சிறையிலே ஒரிருவர் இறந்து, பலர் ரத்தம் சிந்தக் கொடுமைகளை அனுப வித்தக் கடுமையான அரசியல் சூழ்நிலை சூழ்ந்திருந்த நேரம்!

இவற்றையெல்லாம் மறந்தார் எம்.ஜி.ஆர். தனது நாட்டுக்கு அல்லவா ஆபத்து என்பதை உணர்ந்தார்! சிந்தித்தார்: 'சுவர் இருந்தால்தான்் சித்திரம் எழுத முடியும். நாடு இருந்தால்தான்் வீடு இருக்க முடியும்:

இந்திய உபகண்டத்துக்கு வந்துள்ள ஆக்ரமிப்பு ஆபத்தை, வேரடி மண்ணோடுகளைய இந்திய மக்கள் தத்தம் கட்சிகளை மறந்து ஒன்றுபட வேண்டும்”