பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 31

தன்னுடைய கட்சிக்கு எதிர்கட்சி ஆளும் கட்சி என்ற கீழ்புத்தி அவரிடம் இல்லை ஆளும் கட்சியிலிருப்பவர்களும் பொது மக்கள் தான்ே என்ற பெரும்புத்தி இருந்ததால்தான்் - மக்களை எல்லாம் சமத்துவ பெரு நோக்கோடு எம்.ஜி.ஆர். பார்த்தார்: தக்க உதவிகளை எல்லாம் தடையின்றிச் செய்தார்:

நடிகர் பரம்பரைக் கோடாரிக் காம்பாக அவர் என்றுமே இருந்ததில்லை. மாறாக, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக, ஸ்டண்ட் யூனியன்' ஒன்று அமைய, தனது சொந்தப். பணத்தையும் ஒரளவு கொடுத்து உதவினார்:

நீக்ரோக்களை அடிமையாக ஏலம் போடும் காட்சி யினையும், அந்த மக்களை விலைக்கு வாங்கி மாடுகளைப் போல நடத்தும் பிரபுக்களின் மனிதத் தன்மையற்றக் கொடுமை யினையும் ஒழிக்கப் புறப்பட்ட மாவீரன் ஆப்ரகாம் லிங்கன் அவர்களை, ஒரு நாடகக் கொட்டகையிலே, ஜான் வில்கியூஸ் பூத் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்!

ஆனால், திரைப்படக் காட்சிகளுக்காக வேண்டுமானால் எம்.ஜி.ஆர். துப்பாக்கியைத் துக்கியிருக்கலாம்: ஒர் உயிரைத் துடிதுடித்துக் கொல்ல அவர் அதைத் தொட்டவரல்லர்.

நடிகர் குலப் பொறாமை, அரசியல் சூதாட்டம் காரண is fé, நடிகவேள் எம்.ஆர். ராதா என்ற நடிகர் தூக்கிய ரிவால்வர் குண்டுகளைத் தனது கழுத்துத் தொண்டையிலே ஏந்தி, எம்.ஜி.ஆர். தனது கொடை அருளால் உயிர் பிழைத்துக் கொண்டார் என்று வேண்டுமானால் கூறலாம்:

பிரான்ஸ் நாட்டிலே சார்ல்ஸ் - லா - பூசியர் என்ற ஒரு நடிகர் இருந்தார். அவர் மக்கள் உரிமைக்காகப் போராடி வந்த மாவீரர்!

சந்துமுனைகள் முதல் சந்தைப் பேட்டைகள் வரை. அரண்மனை வாயில்கள் முதல் அங்காடி முனைகள் வரை, பிரான்ஸ் நாட்டு மக்கள் சுதந்திரமாக, வளமாக வாழ வேண்டும் என்பதற்குரிய சம்பவங்களை நாடகமாக நடித்துக் காட்டி அவர் போராடி வந்தார்: