பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షిణీ மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

புரட்சி நடிகரை, அப்போதைய ஆளும் கட்சி, சட்டமன்ற மேலவை, உறுப்பினராக்கவில்லை. ஆனால், தமிழக மக்கள் அவரை பரங்கிமலை தொகுதியில் இருந்து தமது ஒட்டுச் சக்தி கள் மூலமாக சட்டமன்ற உறுப்பினராக்கி, தமது குறைகளை எடுத்துச் சொல்ல துது விட்டனர்!

சர் லாபூசியர் நாடாளுமன்றத்திலும், சிறையிலும், தனது நாடகக் கருத்துக்களை நடித்து, பாஸ்டில் என்ற கொடுமைக் கூடாரத்தைத் தகர்த்தெறிந்து, லூயி ஆட்சியையே மாற்றிடும் பிரெஞ்சு புரட்சிக்குக் காரண கர்த்தாவாக இருந்தார்:

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ஜனநாயகப் புரட்சிக்கு மக்களைத் தயார் செய்து வைத்திருந்த காரணத்தால், அவரைக் கொல்ல ஒரு நடிகன் ஏந்திய கைத் துப்பாக்கியின் வேட் டொலியை எதிர்த்து, அதே மக்கள், 'ஒட்டொலி மூலம் அப்போதைய ஆட்சியை எதிர்த்து தவிடு பொடியாக்கி காட்டி விட்டார்கள்:

இவ்வாறு புரட்சி நடிகர், கலைஞனாக இருந்து கொண்டே ஒர் ஆட்சியை மாற்றுமளவுக்கு மக்கள் ஜனநாயகனாக நடமாடினார் என்பது கலையுலக வரலாற்றில் ஒர் பொன்னேடு ஆகும்:

புரட்சி நடிகர் கலையுலகக் கோமானாகக் காட்சியளித் தாலும், கர்வம் இல்லாதவர், அடக்கமானவர், நன்றி கொன்றிடும் பண்பற்றவர், எல்லாரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற பெருே

குடையவர், தன்னை வைதாரையும் வாழ வைத்த தறுகணாளர் ஆவார்:

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களுடைய செல்வக் குமரிகள் இருவருக்கும் லட்ச ரூபாய்க்கு மேல் செவழித்து திருமணம் செய்து வைத்து அவர்கள் குடும்பத்தைக் குன்றின் மேலிட்ட விளக்கென ஒளியிட வைத்தவர் எம்.ஜி.ஆர். அ.ெ TகST .