பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 95

நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி அவர்கள் குடும்பத்தை, தான்் சாகும்வரை அரசியல் தகுதியோடு வாழ வைத்து, நட்பிற்கு இலக்கணமாக நடமாடினார்!

தன்னிடம் பணியாற்றிய அவருடைய கலைக் குடும் பங்கட்கு, எண்னற்ற வாழ்வு- தாழ்வுக் கொடைகளைக் கொடுத்து, அவரவருடைய ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பண்டாளர் அவர்!

கலை உலகத்தில் எத்தனையோ எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், நடிகர்களுக்கும் கலை நுட்ப தொழிலாளர் கட்கும் ஏணியாக நின்று தோள் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.:

கலைவாணர், தனது கார் ஒட்டும் தொழிலாளிக்கு வெள்ளிவிழா கொண்டாடி, பொன்னாடைப் போத்தினார்: ஆனால் எம்.ஜி.ஆர். தனது நாணயமான கணக்குப்பிள்ளையை மந்திரியாகவே பணியாற்ற வைத்தார்! உலகம் கண்டதுண்டா இந்த அற்புதத்தை?

புரட்சி நடிகர், தனது உழைப்பால் வந்த வருவாயைக் கொண்டு, சென்னை அடையாறு பகுதியில், தனது தாயின் பெயரால் சத்யா ஸ்டுடியோ என்ற ஒரு ஸ்டியோவை உருவாக்கினார்!

ஆனால், அவர் சாகும்போது அந்த ஸ்டுடியோவின் முதலாளிகள் யார் தெரியுமா? அவரிடம் பணியாற்றிய தொழிலாளர் தோழர்கள் தான்்!

ரஷ்ய நாட்டிலேயாகட்டும், அல்லது கம்யூனிசம் பரவிய பிற நாடுகளிலேயாகாட்டும், தனி மனிதன் உழைப்பால், தான்் ஈட்டிய பொருளால் உருவான ஒரு தொழிலகத்தை, அதுவும் பல லட்சங்கள் பெறுமானமுள்ள ஒரு பெரிய நிறுவனத்தை, தொழிலாளர்களுக்கு சம பங்காக உரிமை எழுதி வைத்த ஒரு சமதர்மவாதியை, உண்மைப் பொதுவுடைமைவாதியை, உலகத் தலைவர்களிலே யாராவது ஒருவர் இருந்தால் காட்டட்டுமே புரிந்து கொள்ளலாம்?