பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மதுராங் : அதையும் வெல்கிறதல்லவா மங்கையர்க் கரசியின் தியாகம். அமைச்சரே ! காந்தருபனும் மங்கையர்க்கரசியும் என் இரு கண்கள். அதில் ஒன்று வானம்....

மந்திரி : மற்ருென்று ... அதில் தோன்றும் வர்ணவில்

(என்று புகழ்ந்துபேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது தான மண்டபத்துக்கு கவி வித்தி யாபதி, கையில் ஒரு வெள்ளித் தொட்டிலுடன் வந்து காந்தருபனை வணங்கியபடி) கவி வித்தியாபதி : இளவரசே ! காந்த ஒ! கவி வித்தியாபதியா வா வா !

கவி : கண்ணுடி கதிகள் ஒட்டிக்கொண்டிருக்கும் காஷ் மீரதேசம் சென்றிருந்தேன். அதனுல்தான் உங்கள் கல்யாணத்துக்கூட வரமுடியாமல் போய்விட்டது. காந்த பரவாயில்லை. வித்தியாபதி! நீ வெகு தூரத்தில் இருந்தாலும் ... உன் வார்த்தைகள் என் பக்கத்தி லேயே இருக்கின்றன.

(என்று கூறிப்பிறகு தன் மனைவியைப்பற்றிக் கவிஞனிடம்) காந்த : கண்பா ... இவள்தான் என் மனைவி மங்கை யர்க்கரசி. இந்த மகுடத்தின் வெளிச்சத்தை வளர்க்கும் மாணிக்கம்.

(என்று கூறிப் பிறகு கவிஞரைப்பற்றி தன் மனைவியிடம்) 4 காந்த : மங்கையர்க்கரசி "...இவர் என் பால்ய நண்பர். பள்ளித்தோழர். கவிஞர் திலகம். காவியங்களின் தந்தை.