பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

(என்று கூறி அறிமுகப் படுத்திவைக்க, அப் போது) . . . . - - மங்கை : மகிழ்ச்சி. இவர் காவிய ஞானத்தைக் கேட்க

எனக்குப் பிரியமாக இருக்கிறது இளவரசே! கவி : அதற்கென்ன எப்பொழுது வேண்டும்ாலுைம்

சித்தமாயிருக்கிறேன்.

(என்று கூறிக்கொண்டே தான் கொண்டுவக் திருக்கும் தொட்டிலே இளவரசனிடம் நீட்டியபடி) கவி : இது.இளவரசிக்கு. - .

(என்று கொடுக்க காந்தரூபன் வாங்காமல்) காந்த இதை நீயே கொடுக்கலாம்.

(என்று சொல்ல, கவி உடனே இளவரசியிடம் கொடுக்க, இளவரசி அதை வாங்கிக் கூர்ந்து பார்த்து ஆச்சரியத்தோடு) .

, or ,

மங்கை சிங்காரமான தொட்டில். இதில் ஒரு சித்திரக் குழந்தை. என்ன விசித்திரமான வேலைப்பாடு. இதைப் படைத்தவன் இதன் அழகுக்கு அதிகமான வாலிபத்தை உண்டாக்கிவிட்டான் இளவரசே ! இந்த வெள்ளிச் சிலைக்கு உயிர் இருந்தால், இக் நேரம் என்னை அம்மா என்று அழைத்திருக்கும்.

(என்று கூற, கவிஞன் இளவரசியின் காவிய உள்ளத்தை ரசித்து, மகிழ்ச்சியோடு) - கவி : இளவர்சே! இளவரசி ஒரு அழகு ராணி மட்டு அல்ல. வித்தையிலும் ஒரு வாணிதான். இவர்களை அடைந்தது தங்கள் பாக்கியம். காந்த : கவிஞனே ஒய்வான, கேரங்களில்; அடிக்கடி

இங்கே வந்து போ.