பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

காந்த நம் அரண்மனையில் உள்ள் அந்தப்புரத்தில்

தான் இருக்கிருேம். --- மங்கை : பார்க்கும் இடமெல்லாம் ஒரே புதுமையாகத்

தெரிகிறதே.

(என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, சசிகலா தன் மந்திர சக்தியால் மங்கையர்க் கரசியைப் பூலோகத்துக்கு அனுப்பிவிடு கிருள்)

காட்சி . 9

இடம்: மதுராங்கதன் அறை

(மதுராங்கதன் தன் அறையில் அங்குமிங்கும் உலவிக் கொண்டிருக்கையில், இளவரசனைத் தேடச் சென்ற ஆட்களில் மூவர் அவ்விடம் வந்து) • * ஆள் : மஹாராஜா மதுராங்கதன் : என் கண்மணி வந்து விட்டான?

ஆள் : வேந்தே கலிங்க தேசம், கடாரம், காடு, மலைப் பிரதேசம், பாலைவனங்கள் எங்கும் அலைந்தோம். எங்கள் கால்படாத இடமே இல்லை. எங்கு தேடியும் இளவரசர் தென்படவில்லை மஹர்ராஜா.

மதுரா : என் ராஜமகன் இன்னும் தென்படவில்லையா? இந்த சாம்ராஜ்யத்தின் உப்பின் சாமர்த்தியம் இவ்வளவுதான! மீண்டும் போய்த் தேடுங்கள் என் ராஜதிலகத்தை எங்கிருந்தாலும் கண்டு பிடி யுங்கள் போங்கள் போங்கள். -