பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

காட்சி - 14

இடம் : மங்கையர்க்கரசியின் அந்தப்புரம்

(கவி அந்தப்புரத்துக்கு வருவதைக் கண்ட தோழி ஒருத்தி, மன்னனிடம் தெரிவிக்க ஒடு கிருள். இளவரசி கவிஞனைக் கண்டு)

மங்கை : அம்பிகை, வைதாரையும் வாழவைப்பாள் என்று எனக்கு ஆறுதல் கூறினிர்களே. என்னிடம் இரக்கங்காட்ட ஏன் தயங்குகிருள். இதுவரை என்காயகனைக் கனவிலாவது கண்டு களித்து வந்தேன். இப்போது அதுவும் கலைந்துவிட்டதே!

கவி : விரதத்தை மட்டும் வி க் ன மி ன் றி கடத்தி, வாருங்கள். உங்கள் எண்ணம் ஈடேறும். இது உறுதி.

மங்கை : அந்த உறுதிதானே என்னை உயிருடன் வைத்திருக்கிறது. இன்று வருவார் காளை வருவார் என்று; காட்களே எண்ணிய விரல்கள் ஒய்ந்தன. மறு வசந்தமும் வரப்போகிறது. என் கணவர் இருக்கும் இடங்கூடத் தெரியவில்லே! நான் பழிச் சொல்லுக்கு ஆளாகி, என் வாழ்க்கை இப்படியே பாழாக வேண்டியதுதாளு?

கவி : பழிச்சொல்லுக்கு பயப்படாதீர்கள். கேரத்துக்கு ஒரு நினைவு மாற்றும் உலகக்தானே! இளவரசர் நிச்சயமாக வந்துவிடுவார். உங்கள் பிரார்த்தனை யோடு இந்த ஸ்லோகங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

(என்று தன்னிடம் உள்ள ஒலச்சுவடியை மங்கையர்க்கரசியிடம் கொடுக்க; அதை அவள்