பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

உயிருக்கு இவ்வளவு கேரம் அவகாசம் கொடுத் ததே பெரிய தவறு. இந்த சாகசக்காரியைச் சிக்கிரம் சித்ரவதை செய்யுங்கள். அப்போதுதான் இங்குள்ள எல்லோருக்கும் சந்தோஷம் ஏற்படும்.

சுதா : ஆம்! கிராதகி-மானைப்போல் பார்க்கத் தெரிக்த உனக்கு, அதன் மானத்தைப்போல் வாழத் தெரிந்ததா? சண்டாளி. சதையின் சிற்றின்டத் துக்காக, அன்னிய புருஷனிடம் அனுராக சுகிர்தம் அனுபவித்து, இந்த மஹா ராஜ் பத்துக்கே மாருத அவமானத்தைத் தேடித்தந்த நீயும்...உலகம் முடியுமட்டும், தாயைப் பெண்டாளவந்த சண் டாளன் என்ற அபகீர்த்தியைத் தேடிக் கொண்ட கானும் இந்தக் கணம் அழிக் துவிடுவதே மேல். சாஸ்திரங்களுக்கு எதிரிகளாகிவிட்ட நாம், இன் னும் சாகாப ல் இருப்பதைக் கேள்விப்பட்டால், இந்த சாம்ராஜ்யத்தில் உள்ள குன்றுகள்கூட வெட்கத்தால் குனிந்துகொள்ளும் மு. த லி ல் உன்னே க்கொன்று, பிறகு இதே வாளை, என் சாவுக் காகவும் எடுத்துக்கொள்ளுகிறேன்.

(என்று கூறி மங்கையர்க்கரசியை வெட்டு வதற்குத் தன் வாளை ஒங்க, அப்போது ஒரு வெளிச்சம் திடீரென்று தோன்றி அந்த வாளை முறித்துவிடுகிறது. இதைக்கண்டு சபை பிரமிக்கிறது சுதாமன் மகலக்கிருன். அப் போது மகனைப் பார்த்து)

மங்கை : மகனே! எந்த மனித சக்தியாலும், என்னை மரணமாக்க முடியாது. அப்பா அன்றைக்கே இந்தக் கொலைகாரனின் வாள் என் ஆவியைப் பிரித்துவிடும் என்று எண்ணி ஆனந்தப்பட்டேன்.