பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

கிடையாதா? பறவைகளுக்குக் கூடும்; பாம்புக்குப் புற்றும்; தண்ணிருக்குப் பள்ளமும், ஒய்வுக்காகப் படைத்த தெய்வம், என் ஒய்வுக்கு ஏன் ஒன்றும் படைக்கவில்லை? அட தெய்வமே! சுக துக்கங்கள் சுற்றிக் பொண்டிருக்கும், இந்தப் பாழும் பூமியில், நான் ஏன் பெண்ணுகப் பிறந்தேன். நான்.ஒரு பாம்பாக இருக் தாலும், இந்த உலகம் எனக்குப் பால் கொடுத்து வளர்க்கும். ஒரு வேம்பாக இருந்தாலும், கான் வெட்டுப் படாமல் வளருவேன். ஐயோ! இந்தப் பெண் ஜென்மமே மஹா புண்ஜென்மந்தான். என்ன உலகம் இது? எங்கு பார்த்தாலும் அதர்மந்தானு உலகத்தில் உண்மைக்கே இடமில்லையா ? வேதம், சாஸ்திரம், இவைகளின் வார்த்தைகள் எல்லாம், வெறும் சப்தம் தான ? தேவி சுக்ரவார விரதம் அனுஷ்டித்து வந்ததற்கு எனக்குக் கிடைக்கும் சுகம் இதுதானு: அநீதிக்கும் .அக்ரமங்களுக்கும் ஆதரவு காட்டுவது தான் உன் கருணையா? துயரங்களுக்குப் பரிகாரம் தேடித்தராத நீயும் ஒரு தெய்வந்தானு: தெய்வம்... அகாதி காலக்தொட்டு மனிதன்மீது கட்டாயப்படுத்தப் பட்டு வரும் அவசியமில்லாத உளுத்துப்போன ஒரு மூடநம்பிககைதான் தெய்வம்! கடவுளாம்! தெய்வமாம்! எல்லாம் கட்டுக் கதை! வயிறு வளர்ப்பதற்குச் சூழ்ச்சிக் காரர்கள் உற்பத்தி செய்து வைத்திருக்கும் சொல் வியாபாரம் ! கடவுள் எங்குமே கிடையாது.

(என்று கூறிக் கொஞ்ச கேரம் மெளனமாக இருந்து) மங்கை ஆ ! என்ன ! ...... கான் தான இப்படிப் பேசு கிறேன். அ ண் ட ச ராச ரங் களையும் காத்து ரட்சிக்கும் ...... ஆண்டவன் இல்லை என்று யார் சொன்னது ! தெய்வம் இருக்கிறது. தெய்வம் இருக்கிறது. தெய்வம் இருக்கும் போது சத்தியம்