பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மஞ்சள் முட்டை.pdf


பலூன் பாப்பா

லூன் உங்களுக்குத் தெரியுமல்லவா ? அதை வாங்கி ஊதி, கால்பந்து போன்ற உருண்டையான அதன் வடிவத்தைப் பார்ப்பதிலே உங்களுக்கு ஆசைதானே? எத்தனை வகையான பலூன்கள்! அவற்றிலே கலர் எத்தனை எத்தனை!

ஒன்று, சிவப்பாக இருக்கும். இன்னொன்று, மஞ்சளாக இருக்கும். குங்குமம் போலவும், பச்சையாகவும் இப்படி எத்தனையோ நிறத்திலே பலூன் உண்டு.

வடிவங்கள்கூட வெவ்வேறு வகையாக இருக்கும். ஊதினால் ஒன்று புடலங்காய்போல இருக்கும். பாம்பு போல ஒன்று. சுரைக்காயைப்போல ஒன்று, பூசணிக் காயைப்போல ஒன்று.