பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

நடராஜன் கால்பந்து அளவுக்குப் பலூனை ஊதினான். பலூன் பாப்பா சிரித்தது. அப்பொழுது நடராஜன்

“பலூன் பாப்பா பலூன் பாப்பா
கோபங்கொள்ளாதே,
பந்தைக் காட்டிலும் பெரிதாய் ஊதேன்.
வெடித்துப் போகாதே”

என்று பாடிக்கொண்டே ஆடினான். அவனுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.