பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வருத்தத்தாலேயே மனம் நொந்து இறந்துவிட்டாள். இறப்பதற்கு முன்னால், “மகனே, உனக்குத் தகப்பனும் இல்லை, நானும் உன்னை விட்டுப் பிரியப் போகிறேன். ஆகையால், நீ யாரையாவது அடைந்து உன் அறிவைப் பெருக்கிக்கொள். அப்பொழுதுதான் நீ வாழ்க்கையிலே முன்னேற முடியும்,” என்று சொல்லிவிட்டு இறந்தாள்.

தாய் இறந்ததும் அவனுக்குத் திடீரென்று மனத்திலே இடி விழுந்ததுபோலத் தோன்றியது. அவன் புரண்டு புரண்டு அழுதான். பிறகு அறிவு தேடவேண்டும் என்ற உறுதியோடு புறப்பட்டான்.

தண்டி மூக்கு தனக்குப் பாதகமாக இருப்பதை உணர்ந்து அவன், “வேலை வேணும், தண்டிமூக்கு வேண்டாம்” என்று சொல்லிக்கொண்டே அலைந்தான்.

ஓர் ஊருக்குப் போனபோது அங்கிருந்த பெரியவர் ஒருவர் அவனைப் பார்த்து இரக்கங்கொண்டு, அவனிடம் பல கேள்விகள் கேட்டார். தண்டி மூக்கன் அவனுடைய வாழ்க்கையை அவரிடம் சொல்லிவிட்டு அழுதான். அவனுக்குப் பசி பொறுக்க முடியவில்லை. அதை அறிந்த அந்தப் பெரியவர் அவனுக்கு உணவு தந்தார். பசி தணிந்தவுடனே அவனுக்குப் புதிய உற்சாகம் வந்து விட்டது.

“தண்டிமூக்கு வேண்டாம் சாப்பாடு வேண்டுமே
மூக்கு வேண்டாம் மூளை வேண்டுமே”

என்று பாடிக்கொண்டே ஆடத் தொடங்கினான்.

அவனுக்கு நல்ல வேடிக்கை செய்யும் திறமை இருப்பதை உணர்ந்து, அவனை ஒரு சர்க்கஸில் கோமாளியாகச் சேர்த்துவிட்டார் அந்தப் பெரியவர். கொஞ்ச நாளில் அவன் பெரிய பபூன் (கோமாளி) ஆகிவிட்டான். அவன் தன் தண்டி மூக்கின்மேலே களிமண் உருண்டையை வைத்து, அதற்கு வர்ணம் பூசிக்கொண்டு வருவதைப் பார்த்தாலே எல்லோரும் கைதட்டுவார்கள்; சிரிப்பார்கள். மேலும் அவன் நல்ல வேடிக்கைகள் செய்வான். அதனால் அவனை எல்லோரும் புகழ்ந்தார்கள். சர்க்கஸ் கம்பெனிக்கு