பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

யின் கழுத்தைச் சுற்றிலும் மப்ளர்போலச் சுற்றிவைத்துக் குளிர்காற்றுப் படாதவாறு செய்தன.

சிவிங்கியின் மேல் ஏறிக் கழுத்தைச் சுற்றி வெதுவெதுப்பாக இருக்கும்படி கெட்டியாகத் தழுவிப் பிடித்துக் கொண்டன.

“பாவம், நல்ல ஒட்டகச்சிவிங்கி. அதன் கண்களைப் பாருங்கள், எத்தனை அழகு” என்று அவையெல்லாம் பேசிக்கொண்டன.

சில நாள்களில் ஒட்டகச்சிவிங்கிக்குத் தொண்டைப் புண் ஆறிவிட்டது. ஆனால், கம்மிப்போன தொண்டை அப்படியே அடைத்துப்போய்விட்டது. மறுபடியும் அதனால் பேசவே முடியவில்லை. அந்தக் காலம் முதற் கொண்டு ஒட்டகச்சிவிங்கிகள் எல்லாவற்றிற்கும் பேசும் சக்தியே இல்லாமற் போய்விட்டதாம். விலங்குகளும் பறவைகளும் அதை அறிந்து மிகவும் விசனப்பட்டன. இருந்தாலும், அவற்றால் ஒட்டகச்சிவிங்கியைப் பேச வைக்கவே முடியவில்லை. அதனால் ஒட்டகச்சிவிங்கிக்கு ஊமை விலங்கு என்று பெயர் ஏற்பட்டது.



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மஞ்சள்_முட்டை.pdf/21&oldid=1090547" இலிருந்து மீள்விக்கப்பட்டது