பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
யாரடா அவன்?

ண்ணம்மா, இந்தக் கோடை விடுமுறைக்கு அசோக் இங்கு வருவான்; கடிதம் எழுதியிருக்கிறான்” என்று உற்சாகத்தோடு கூவினான் கந்தசாமி. கடிதத்தை இன்னும் அவன் படித்து முடிக்கவில்லை.

“அப்படியா, அண்ணா? எங்கே, கடிதத்தை என்னிடம் கொடு. நான் படிக்கிறேன், அசோக் வந்தால் ரொம்ப நன்றாக இருக்கும்” என்று மகிழ்ச்சியோடு கூறிக்கொண்டே, கண்ணம்மா கடிதத்தைப் பிடுங்கிப் படிக்கலானாள்.

கந்தசாமியும் கண்ணம்மாளும் தங்கள் பெற்றோரோடு கிராமத்திலே வசித்து வந்தார்கள். அந்தக் கிராமத்திலே புதிதாக ஓர் உயர்நிலைப்பள்ளி ஏற்பட்டிருந்தது. அதிலே கந்தசாமி ஒன்பதாம் வகுப்பிலும்

ம.மு - 2