பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20


“ஓ, நன்றாகத் தூங்குவேன். எனக்குப் பயமே இல்லை” என்று அசோக் மடமடவென்று பதிலளித்தான்.

அந்த அறைக்குள்ளே அசோக் அன்றிரவு தனியாகப் படுத்து உறங்குவது என்று ஏற்பாடாயிற்று.

“அண்ணா, இதென்ன வேடிக்கை? அந்த அறையிலே பேய் இல்லையென்று நமக்குத்தான் தெரியுமே!” என்று கண்ணம்மா கந்தசாமியிடம் தனியாகக் கேட்டாள்.

“ஒரு வேடிக்கை செய்யப்போகிறேன். நீ பேசாமல் பார்த்துக்கொண்டிரு” என்றான் அண்ணன்.

“என்ன வேடிக்கை அது? எனக்கும் கொஞ்சம் சொல்லேன்.”

என் வகுப்பிலே ராமன் என்ற ஒரு பையன் படிக்கிறான், உனக்குத் தெரியுமா? என்னோடு அடிக்கடி பார்த்திருப்பாயே!”

“யார், தெனாலிராமனா?”

“ஆமாம், அவனேதான்; அவன் எத்தனையோ வேடிக்கைகள் செய்வான்; அதனால் அவனைத் தெனாலிராமன் என்று நாங்கள் எல்லாம் கூப்பிடுவோம். அவன் ஒரு கிளியை வளர்த்து வருகிறான். சீழ்க்கை அடித்தால் அது, ‘யாரடா அவன் ? எங்கடா வந்தாய்? பிடிடா அவனை’ என்று ஒருவிதமான கீச்சுக் குரலில் கத்தும். அந்தக் கிளியைக் கூண்டோடு வாங்கி வந்திருக்கிறேன்” என்றான் கந்தசாமி. அவன் கண்களில் ஒளி வீசிற்று.

“ஆமாம், அதை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்?” என்று ஒன்றும் விளங்காமல் கேட்டாள் கண்ணம்மா.

“அந்தக் கிளிக்கூண்டை கிழக்குப் பார்த்த அறையிலே, பரண்மேலே வைத்துவிடப் போகிறேன். இரவிலே நான் சீழ்க்கை அடிக்கும்போது என்ன நடக்கிறது என்பதை நீயே பார்த்துக்கொள்.”

“அண்ணா, அசோக் ரொம்ப பயந்துவிடப் போகிறான். அவனுக்கு ஏதாவது உடம்புக்கு ஆகாமற்போனால் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நாம் செய்யும் வேடிக்கை