பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முத்துவின் முதல் திருட்டு

முத்து என்று ஒரு பையன் இருந்தான், அவன் தங்கையின் பெயர் கமலம். இரண்டு பேரும் ஒரு நாள் பள்ளிக்கூடம் செல்லும்போது, ஒரு தோட்டத்திலே ஒரு மரத்தில் மாம்பழம் நிறைய இருப்பதைப் பார்த்தார்கள். அந்தத் தோட்டம் ஒரு வயதான அம்மாளுக்குச் சொந்தம். பழங்களைக் கண்டு அவற்றில் சிலவற்றைப் பறித்துக்கொள்ள வேண்டும் என்று முத்துவுக்கு ஆசை. “வேறொருவர் தோட்டத்தில் இருந்து பழங்களைத் திருடுவது பாவமல்லவா? அம்மாவுக்குத் தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார்கள்” என்றாள் கமலம்.

“அம்மாவுக்கு எப்படித் தெரியப்போகிறது? நாளைக்கு விடுமுறை. நீயும் கூடவா. என் சொல்லைத் தட்டினால் உன்னை அடிப்பேன்” என்றான் முத்து. அவன் சொல்லைத் தட்டினால் அடிப்பான் என்று பயந்தாள் கமலம். அவன் சொன்னபடியே மறுநாள் காலையில் இரண்டு பேரும் புறப்பட்டார்கள். கமலம் அப்-