பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

அல்லாமல் அந்த முட்டை ஒரே மஞ்சள் நிறமாக இருந்தது ஓர் ஆச்சரியம்.

அந்தப் பறவைகள் எல்லாம் ஆந்தையிடத்திலே போய் அதைப்பற்றிச் சொல்லின.

ஆந்தைதான் அந்தப் பறவைகளுக்கு அதிபதி. அதற்கு மூளை அதிகம் என்று அந்தப் பறவைகள் அதையே அதிபதியாக ஏற்றுக்கொண்டிருந்தன.

ஆந்தை தன் பட்டுப்போன்ற இறக்கைகளை அடித்துக் கொண்டு, சத்தமில்லாமல் பறந்து வந்து, மஞ்சள் முட்டையைப் பார்த்தது. அதற்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

உடனே அது குயிலைப் பார்த்துக் கேட்டது, “குயிலே, உனக்குத்தான் கூடு கட்டத் தெரியாது. இது உன்னுடைய முட்டையா?” என்று கேட்டது.

அதற்குக் குயில் கூ, கூவென்று இனிமையாகப் பாடிக்கொண்டே, “இது என்னுதல்ல - என் முட்டை வெள்ளையாக இருக்கும். இது மஞ்சள் முட்டை” என்று சொல்லிற்று.

பிறகு, ஆந்தை காக்கையைப் பார்த்து, “காக்கையே, உன் முட்டையைக் குயில் உன் கூட்டிலிருந்து தந்திரமாக உன்னை ஏமாற்றிவிட்டு எடுத்துவந்து இங்கே போட்டுவிட்டதா? நன்றாகப் பார்” என்று ஆணையிட்டது.

காக்கையும் நன்றாகப் பார்த்துவிட்டுக் கா, கா என்று கத்திக்கொண்டே, “இது என்னுதல்ல - என் முட்டை வெள்ளையாக இருக்கும். இது மஞ்சள் முட்டை - என்னுதல்ல” என்றது.

அந்தச் சமயத்திலே, பக்கத்தில் இருந்த தண்ணீர்க் குட்டையில் நீந்திக்கொண்டிருந்த வாத்து, இந்த முட்டையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதைப் பார்க்க வந்தது.

அதைக் கண்ட ஆந்தை, “குள்ள வாத்தே, இந்த முட்டை உன்னுடையதா ? உனக்குத்தான் அடை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மஞ்சள்_முட்டை.pdf/7&oldid=1090493" இலிருந்து மீள்விக்கப்பட்டது