பக்கம்:மணமக்களுக்கு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பழைய முறை

பழங்காலத்தில், தமிழகத்தில் ஒத்த குணம், ஒத்த நிறம், ஒத்த வயது, ஒத்த கல்வி ஆகிய இவைகளையுடைய காளையும் கன்னியும் ஆகிய இருவரும், பெற்றோர் கொடுக்கக் கொண்டு, வாழ்க்கை ஒப்பந்தம் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தனர். ஆரியர்களை வைத்துச் சடங்குகளைச் செய்து திருமணத்தை நடத்துகிற முறை தமிழகத்திலே இடைக்காலத்திலே புகுந்த ஒன்று, அது இடைக்காலத்திலே அழிந்து போயிற்று; அவ்வளவுதான்.

பழைய முறையே இப்பொழுது மறுமலர்ச்சியடைந்து வருகிறது. வந்திருக்கின்ற பெருமக்கள் அனைவரும் மன மகிழ்வோடு இதை வாழ்த்துவதுடன், தங்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்ற பிறகு, அங்கும் இம்மாதிரித் திருமணங்கள் நடைபெற வேண்டுமென முயற்சிப்பது நல்லது எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில்,இப்பொழுது சுயமரியாதைத் திருமணம், சீர்திருத்தத் திருமணம், தமிழ்த் திருமணம், அரசியல் திருமணம், பதிவுத் திருமணம் எனப் பல்வேறு முறைகளில் திருந்திய திருமணங்கள் பல்வேறு வகையாக நடைபெற்று வருகின்றன. இவையனைத்தும் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு ஒரேமுறையில் நடைபெற வேண்டுமென விரும்புகிறவர்களில் நானும் ஒருவன். பெருமக்களாகிய நீங்களும் இவ்வாறே விரும்ப வேண்டுமென்பது எனது எண்ணம்.

நான் இன்று நடத்திவைக்கும் திருமணம் இரண்டாயிரத்து முந்நூற்றைத் தாண்டிய திருமணம். கடந்த 47 ஆண்டுகளாகவே திருமணத்தை நடத்தி வருகிறேன். நான் நடத்திவருகிற இத்தமிழ்த் திருமண முறை, தமிழ்த் தென்றல் திரு. வி.க. அவர்கள் என் மக்களுக்கு நடத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/12&oldid=1415148" இலிருந்து மீள்விக்கப்பட்டது