பக்கம்:மணமக்களுக்கு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14

புரியாத மொழியில் எது எதையோ சொல்லி, வாழ்க்கை என்றால் இன்னதென அறிவிக்காமலேயே, அவர்களை வாழ்க்கையில் ஈடுபடுத்தி வருகிறோம். அதன் விளைவே இது.

இனியேனும் இத் தவறுகளைச் செய்யாமல், திருமண நாட்களில் சில தமிழ் அறிஞர்களைக்கொண்டு மணமக்களுக்கு அறிவுரையும் அறவுரையும் கூறுவது நலமாகும். அவ்வகையில் நான் இன்று சில அறிவுரைகளை அறவுரைகளைக் கூறுகிறேன்.

அறவுரை

1. மணமகனுக்கும் மணகளுக்கும் நாளையிலிருந்து மாமியார் வீடு புதிது. உடுத்துகின்ற உடையெல்லாம் புதிது. உண்ணுகின்ற உணவெல்லாம் புதிது படுக் கின்ற இடமெல்லாம் புதிது. பார்க்கின்ற முகமெல்லாம் வேற்று முகம் என்ன செய்வது என்றே தெரியாமல் விழிப்பார்கள். வாழ்க்கையிற் சிறு சிக்கல்கள் ஏற்பட்டாலும் மனமுடைந்துவிடுவார்கள். உலகமும் இருண்டுவிட்டது போலத் தோன்றும். அவர்களின் வாழ்வில் ஒரு துன்பம் விளைவதுபோலத் தோன்றும். இந்நிலையிலுள்ள மக்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பிறந்த வள்ளுவர் ஒரே ஒரு குறளைக் கூறிப் போயிருக்கிறார். அது இன்றைய மணமக்களுக்குப் பயன்படுமென எண்ணுகிறேன்.

சேற்று நிலம் மழை பெய்து வரப்பெல்லாம் வழுக்குகிறது. பயிரில் களை அதிகமாக மண்டியிருக்கிறது. களை பிடுங்க எண்ணி வரப்பில் நடக்கிறான் உழவன். வரப்பு அவனை நடக்கவிடாமல் வழுக்கிக் கீழே வீழ்த்துகிறது. வரப்பு வழுக்குகிறதே என்று உட்கார்ந்தான். களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/16&oldid=1307422" இலிருந்து மீள்விக்கப்பட்டது