பக்கம்:மணமக்களுக்கு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



15

மண்டிப் பயிர் பாழாகிறதே என்று மீண்டும் நடக்கத் தொடங்கினான். மறுபடியும் அவனை வரப்பு வழுக்கி. வீழ்த்துகிறது. இப்படித்தான் இல்லறமும் என்று உணர்ந்துகிறார் வள்ளுவர். அறிவு என்ற அரிவாள் கொண்டு பககத்திலுள்ள மரக்கிளைகளில் ஒரு கொம்பை வெட்டிக் கொடுத்தார் வள்ளுவர். வாங்கி ஊன்றினான் உழவன். கால் மூன்றாயிற்று. வழுக்கலில் வெற்றிநடை போட்டுச் சென்று பயிர்களில் உள்ள களைகளை எடுத்துவிட்டான்.

சேற்று நிலத்திலே வழுக்கி வழுக்கி நடக்கிறவனுக்கு ஒரு ஊன்றுகோல் துணைசெய்வதுபோல, வாழ்க்கையில் வழுக்கி வழுக்கி நடக்கிறவர்களுக்குப் ஒரு ஊனறுகோல் தேவை. அது தனக்கு முன்னே இல்லறத்தை நடத்தி வெற்றிகண்ட நல்லறிஞர்களின் வாய்ச் சொல்; அவ்வாய்ச்சொல்லை வாங்கி ஊன்றுங்கள்: வாழ்க்கை வழுக்காது என்று கூறுகிறார் வள்ளுவர். குறள் இதுதான்:

"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்"

வாய்ச்சொல் என்பதிலும், படித்தவனுடைய வாய்ச் சொல், பட்டம் பெற்றவனுடைய வாய்ச்சொல், வயது முதிர்ந்தவனுடைய வாய்ச்சொல், பதவியில் இருப்பவனு டைய வாய்ச்சொல், பணக்காரனுடைய வாய்ச்சொல் என்று கூறாமல், ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்லை வாங்கி ஊன்றுங்கள், வாழ்க்கை வழுக்காது என்று கூறியிருக்கிறார். இன்றைய மணமக்கள் இவ்வறிவுரையைப் பின்பற்றி வாழ்க்கையைத் தொடங்குவது நல்லது.

இல்லாததென்?

2. திருவள்ளுவர் ஒருநாள் ஒரு சாலையில் நடந்து செல்லும் பொழுது, ஓர் ஏழைக் குடிசையில் புகுந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/17&oldid=1307444" இலிருந்து மீள்விக்கப்பட்டது