பக்கம்:மணமக்களுக்கு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20

"ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு"

மணமகனும், மணமகளும் இவ்விரண்டு குறள்களையும் மனப்பாடம் பண்ணியாக வேண்டும், பிறகு அக்குறள் களை வாழ்க்கைக்கும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

உப்பில்லாப் பத்தியம்

7.திருமணமாகாத ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன், உப்பில்லாப் பத்தியம் இருப்பவர்கள். உப்பை எவ்வளவு பெரிதாகக் கருதுகிறார்களோ அப்படித் திருமணத்தை எண்ணியிருக்கிறார்கள். திருமணத் திற்குப் பின் பத்தியம் முறிந்து உப்பைச் சேர்த்துக் கொள்ளும்பொழுது, உப்பைப்பற்றி எவ்வளவு சிறிதாக எண்ணுகிறார்களோ அப்படியே திருமணம் முடிந்த பின் திருமணத்தையும் எண்ணுகிறார்கள். ஆனால், திருமணம் எதற்காக என்றுமட்டும் எண்ணுவதில்லை. எப்படியும் வாழலாம் என்பது வாழ்வல்ல; இப்படித்தான் வாழவேண்டும் என்பதே வாழ்வு.

தியாக வாழ்வு

8.திருமணம் என்பது மணமக்கள் தாங்கள் மட்டும் வாழ்வதற்காக அல்ல; பிறரை வாழவைத்து வாழ வேண்டும் என்பதை மணமக்கள் முதலில் உணர வேண்டும். பிறகு வாழத் துவங்கவேண்டும். வாழ்வில் தன்னலமற்ற வாழ்வு என்று ஒன்று உண்டு. அதுவே தலைசிறந்த வாழ்வாகும். இதைத் தியாக வாழ்வு என வடமொழியாளர் கூறுவர்.

(அ) மழையானது மக்களுக்கு உணவுப் பொருள்களையெல்லாம் உண்டுபண்ணித் தருகிறது. அதோடு அது நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/22&oldid=1306720" இலிருந்து மீள்விக்கப்பட்டது