பக்கம்:மணமக்களுக்கு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



22

(உ) மாடு காலமெல்லாம் உழைக்கிறது. அதன் உழைப்பு மிகப் பெரியது. உழைப்பை மனிதன் மாட்டினிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். மாட்டின் உழைப்பிற்குக் கூலி மனிதன் போடும் தீனியல்ல. எவ்வளவு தீனி போடுகிறானோ அவ்வளவிற்கும் சாணி கொடுத்து விடுகிறது. எவ்வளவு கழுநீர் கொடுத்து விடுகிறானோ அவ்வளவுக்கும் சிறுநீர் கொடுத்துவிடுகிறது. தீனிக்குத் தகுந்த சாணி, கழுநீருக்குத் தகுந்த சிறுநீர். அது அன்றன்றே தன் கணக்கை நேர் செய்துவிடுகிறது. அது எப்போதும் தன் கணக்கில் அதிகப் பற்று வைக்கவிடுவதில்லை. அதன் உழைப்பு தனி. அதற்கு உழவன் கூலியே தருவதில்லை. அது எதையும் எதிர் பார்ப்பதுமில்லை. உழைத்து உழைத்து ஒடாகிவிடுகிறது. எஞ்சியுள்ள இறைச்சியையும் உழவனுக்கு உணவாகக் கொடுத்துவிட்டு அழிந்துபோய்விடுகிறது. அதன் தியாகம் ஆடு, கோழியைப் போல அல்லாமல், இன்னும் ஒருபடி தாண்டுவதை நினைக்க நம் உள்ளம் சிலிர்க்கிறது.

மாட்டுக்கு உரியவன், அது உழைத்து மடிந்ததும் அதன் இறைச்சியைத் தின்றுவிட்டு, அதன் தோலை மரக் கிளைகளிலே காயவைத்தான். அந்தத் தோல் தன் உழவன் கல்லிலும் முள்ளிலும் நடப்பதைக் கண்டு வருந்தி, 'ஐயா நான் எதற்காக இருக்கிறேன்? என் தோலில் ஒரு செருப்பைத் தைத்துக் காலில் போட்டுக்கொண்டு நடங்கள்' என்றும் கூறுகிறது. எவ்வளவு பெரிய தியாகம்! இதனால் அது அடைந்த பயன்?

(ஊ) இஸ்லாமியர்கள் இறைவனை வழிபடும்போது ஊதுவத்தியைக் கொளுத்தி வைக்கிறார்கள். பாத்தியா முடிகிறது. மக்களுக்கு மகிழ்ச்சி. இந்த நல்ல காரியத்திற்கு துணைசெய்த ஊதுபத்தி எங்கே? அது அடியோடு தன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/24&oldid=1306718" இலிருந்து மீள்விக்கப்பட்டது