பக்கம்:மணமக்களுக்கு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



25

பிளாட்பாரத் திலேயே தங்கியிருந்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்து சென்று, சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை வாங்கித் தின்று தண்ணிரைக் குடித்துவிட்டுத் திரும்புவது கருமித்தனம், இது வெறுக்கத் தகுந்தது.

ஒர் ஆண்மகன் விலை உயர்ந்த பட்டு சரிகை உடைகளை அணிந்து திரிவது டம்பம்; தேவையில்லாதது. தூய்மையான வெள்ளை ஆடைகளை அணிந்து வாழ்வது சிக்கனம்; விரும்பத் தகுந்தது. அழுக்கு நிறைந்த - கிழிந்த உடைகளை உடுத்திச் செல்வது கருமித்தனம்; வெறுக்கத் தகுந்தது.

இம் மூன்றையும் பெரும் பணக்காரர்களையோ,கடும் ஏழை மக்களையோ நினையாமல் நம்மைப் போன்ற நடுத்தர மக்களை எண்ணியே கூறுகிறேன்.

இவற்றிற்கு ஒரு இலக்கணமும் உண்டு. அது, 'தேவைக்குமேல் செலவு செய்வது டம்பம்; தேவையின் அளவு செலவு செய்வது சிக்கனம்; தேவைக்கும் செலவு செய்யாதது கருமித்தனம்' என்பதே. இதை மணமக்கள் தம் வாழ்நாளெல்லாம் கையாள்வது நல்லது.

சேமிப்பு

10. குடும்ப வாழ்க்கையில் சேமிப்பு இன்றியமையாத ஒன்று. எவ்வளவு ரூபாய் வருமானம் வந்தாலும், அவ்வளவையும் செலவு செய்து வாழ்வது நல்லதல்ல. அதற்குமேல் அதிகச் செலவு செய்து கடன் வாங்கி வாழ்வது ஒரு கெட்ட பழக்கம். இது வாழ்க்கையைக் கெடுத்துவிடும். ஆகவே வருவாயில் சிறிதளவேனும் மிச்சப்படுத்தி வங்கிகளில் சேமித்தாக வேண்டும். இவ்வாறு சேமிப்பது 5, 10 ஆக இருப்பினும், பின்னால் அது ஒரு பெருந்தொகையாகக் காட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/27&oldid=1307763" இலிருந்து மீள்விக்கப்பட்டது