பக்கம்:மணமக்களுக்கு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



27

கொள்ளும் மணமக்கள் சிறிது தவறி நடந்தாலும் இவ்வுலகம் தாங்காது பழிதுாற்றத் தொடங்கிவிடும். அது, மணமக்களுக்கு, அவர்களின் பெற்றோர்களுக்கு, அவர்களின் சமூகங்களுக்கு மட்டுமல்ல, தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்குமே பழியாக வந்து முடியும். ஆகவே, சீர்திருத்தத் திருமணம் புரிந்து கொள்கின்ற மணமக்களுக்குப் பொறுப்பு அதிகம்.

அவர்கள் பிறரைப் பார்த்து, அதன்படி நடந்து கொள்ளக் கூடாது. தங்களைப் பார்த்து, பிறர் பின்பற்றுகிற மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.

ஒழுக்கம் உயிரினும் சிறந்தது, "உயிரைக் காப்பாற்றுவதைவிட ஒழுக்கத்தைக் காப்பாற்றியாக வேண்டும்" என்பது வள்ளுவர் வாக்கு.

'ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை' என்பது வள்ளுவர் கருத்து. இதிலிருந்து ஆடை, அணிகலன்,படிப்பு:பட்டம்,பணம்,பதவி, எழுத்து,பேச்சு ஆகியவைகளால் அடைய முடியாத மேன்மையை,ஒழுக்கம் ஒன்றினாலேயே அடையலாம் என்று தெரிகிறது. அது மட்டுமல்ல."ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை' என்பது, மேன்மையை அடைவதற்குரிய ஒரே வழி ஒழுக்கம் ஒன்றுமட்டுமே என்பதையும் தெளிவாகப் புலப்படுத்துகிறது.

ஒழுக்கத்தை இழந்துவிட்டார்கள், பழியையே அடைவார்கள். பின்பு ஒருகால் அவர்கள் திருந்தி ஒழுக்கமாக நடந்து கொண்டாலும், உலகம் அவர்களை நம்பாது. அப்போதும் அவரடைவது பழியையே. ஒழுக்கத்தை இழந்து விட்டவர்கள், தாம் செய்த தவறுக்கு மட்டுமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/29&oldid=1306709" இலிருந்து மீள்விக்கப்பட்டது