பக்கம்:மணமக்களுக்கு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



31

நாயைப் பூனையும், பூனையை நாயும் புரிந்துகொள்ள முடியாது. நாய்க்கு மகிழ்ச்சி வந்தால் வாலை ஆட்டுகிறது. பூனைக்கு கோபம் வந்தால் வாலை ஆட்டுகிறது. எப்படி ஒன்றை ஒன்று புரிந்து கொள்ள முடியும்?

பூனைக்கு மகிழ்ச்சி வந்தால், தன் காதை நிமிர்த்தி விரைககிறது. நாய்க்குக் கோபம் வந்தால் காதை நிமிர்த்தி விரைக்கிறது. எப்படி ஒன்றை ஒன்று புரிந்து கொள்ள முடியும்?

இவற்றிலிருந்து. நமக்குப் புலப்படுகிற உண்மையெலலாம்,"கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும். அதுவே இல்வாழ்க்கைக்கு,ஏற்றவழி" என்பதே.


குழந்தை வளர்ப்பு


16. நம் நாட்டில் குழந்தை வளர்ப்புக்களில் அதிகமான கவனிப்பு இல்லை.குறைவாகக் குழந்தைகளைப் பெறுவதே அவர்கள் நன்றாகக் குழந்தைகளை வளர்க்கத்துணை புரியும். உணவை அதிகமாகக் கொடுப்பதை விட, சத்தான உணவைக் குறைவாகக் கொடுத்து வளர்ப்பது நல்லது. அவர்களைப் புழுதியில் புரள விடாமல், கெட்ட பிள்ளைகளோடு சேரவிடாமல், தீய சொற்களைப் பேசவிடாமல், மிகவும் பாதுகாப்பாக வளர்த்தாக வேண்டும்.

பிள்ளைகளின் உடலை வளர்ப்பதைவிட, அறிவை வளர்ப்பதே நலம் பயக்கும். பிள்ளைகள் பள்ளியில் படிப்பதனால் மட்டும் அறிவைப் பெற முடியாது. பெற்றோர்களும் ஆசிரியர்களாக மாறி அவர்களுக்குக் கல்வியையும், ஒழுக்கத்தையும் நாள்தோறும் கற்பித்து, நல்லவழியில் நடத்தியாக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/33&oldid=1309124" இலிருந்து மீள்விக்கப்பட்டது