பக்கம்:மணிவாசகர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னும் தாயுமான அடிகளின் தனிமொழியுடனும் ஒத்து நோக்கி உண்மை காண்க. - - மேற்காட்டிய வாற்றாலும், காட்டப்படாது. இவை போலும் உள்ள பலவாலும் நாடு, மொழி, சமயம் முதலிய வற்றால் வேறுபடாது பெரியார் பலரின் கருத்து ஒன்ற கவே யிருக்குமென்பதனை உய்த்துணர்க. இங்குக் காட்டிய காந்தியடிகளின் கனிந்த மொழி களைப்போல் பலர் மேடைகளிற் பேசவும் எழுத்வும் கான் கின்றோமே எனக் கருதுவோர்.அவ்வடிகளின் உள்ளம்வேறு; உரைவேறு; செயல்வேறு அல்ல வென்பதை உலகம் அறியும். என்னும் நினைவைத் தம்உள்ளத்திற் பதித்து வைப்பாராக. ஆயின், ஒவ்வொரு பெரியாரின் வரலாறுகளையும் நோக்குங்கால், அவ்வவர் வாழ்க்கைநெறிகள் மாறுபட்டுக் காணப்படுகின்றனவே யெனின், அது அவ்வப்போதுள்ள காலம், இடம், நிகழ்ச்சிகளைப் பொறுத்தது என்க.என்னை? மக்கள் பாவைகள்போல அசைவற்றிருப்பவரல்லர்; ஆகலின் அவர்கள் மாறுபாடுடையராதல் இயல்பு. அதற்கு மேற் காட்டிய கால முதலியனவே காரணம் ஆகும். எடுத்துக் காட்டாக சில நூற்றாண்டுகட்கு முன்னர் நம்நாடு இருந்த நிலையும், இற்றைநாள் அஃது இருக்கின்ற நிலையும் அக்க் கண்ணும் புறநோக்குங் கொண்டு பார்ப்போமானால் வேற்றுமை பெரிதுந்தோன்றும். . . . முன் ஒர் கிராம வாழ்க்கையில் உள்ளவன் நகர வாழ்க் கையின் நன்மையையோ தீமையையோ அறியாதிருந்தான். அப்போது கடல், காடு, மலை முதலியன ஒவ்வொரு நாட்டையும் பிரித்து ஒரு நாட்டிலுள்ளோர் பிறநாட்ட்ா ரோடு பழகா வகைசெய்து நின்றன. இந்நாளில் நீராவி மரக்கலங்கள், வானவூர்திகள், புகைவண்டிகள் முதலியவற். 'றால் அவ்விடையூறு முற்றுந் தகர்க்கப்பட்டு உலகமுழுவதும் ஒன்றாக்கப்பட்டது. அதனால் எல்லாநாட்டுமக்களும் ஒ ருவ ரோடொருவர் கலந்து பழகி வருகின்றனர் என்வே, அத் ਨ੍ਹਾਂ સ્વ સ્વ ión

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/101&oldid=852402" இலிருந்து மீள்விக்கப்பட்டது