பக்கம்:மணிவாசகர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்ங்ணம் குறிக்கோள் ஒன்றாகவும் அதனை அடைதற் குரிய நெறிகளை அக்கால, தேச வர்த்தமானத்திற்கு ஏற்ற முறையில் பலவாகவுங் கொண்டு ஒழுகும் பெரியோர்களின் நூல்களை ஆராய்ந்து பார்க்கின், அவற்றின்கண் பெரும் பாலும் அவர்களின் வாழ்க்கை தோல்வியேதான் காணப் படும். வெற்றி குறித்த செய்தி அரிதினும் அரிதாகும். அவ் வரியதும் அவர்களை அறியாது போந்த உண்மையாகும் தோல்விச்செய்தி நிறைந்து காணப்படுதற்குக் காரணம் இரண்டு; ஒன்று, தம் தோல்வி அணுவாயினும் அதனை மலைபோலத் தாங்கருதி வருந்தி ஆண்டவனிடத்து முறை யிடுதல்; மற்றொன்று. ஏனைய மக்களிடத்துக் காணப்படுந் தீச்செயல்களைக் கண்டு வருந்தி அவற்றைத் தம்பாலேற்றிக் கூறி முறையிடல் இது முன்னருங் காட்டப்பட்டது. எனவே எவ்வகையானும் தங்கள் சிறுமையையுந் தோல்வியையுமே அவர்கள் கூறுவார்களேயன்றிப் பெருமையையும் வெற்றி யையுங் கூறார்கள். பின்னுள்ளவை அவர்கட்குத் த்ெரி வதேயில்லை ஒரோவழித் தெரியினும் தாங்கள் கோலி வரை யறுத்த எல்லைக்கு அவை அணுவினும் அணுவாகத் தோன் தும், தோன்றவே அவைகளை அவர்கள் கொள்வதில்லை; ஆனால் பிறருக்கு அவை பெரியவற்றினும் பெரியவையே ஆதலினாற்றான் அங்ங்னங் கருதிய பிறர் தம்மைப் புகழும் போது, r . . . . ." 'இல்லன புகழ்தலின் வைதலே நன்று" என்னுங் கருத் துடையவராய் அப்புகழ்ச்சியை நஞ்சினுங் கொடிதாக அவர் நினைப்பதூஉமென்க. என்னை? அப்பெருமையும் வெற் நியும் தம்மிடத்தில்லை என்பது அவர் கருத்தாகலின், - இனி அணுவினுஞ் சிறிதாகிய தீமையை மலையினும் பெரிதாகக் கருதியிருத்தலினால் பிறர் இகழ்ச்சியைப் பெரி தும் அவர் விரும்புகின்றனர்; என்னை? தமக்குச் செருக்கு 103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/103&oldid=852406" இலிருந்து மீள்விக்கப்பட்டது