பக்கம்:மணிவாசகர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பாதிருத்தற்கும், தம் தீமையைப் போக்குதற்கும் அது துணையாக நிற்கும் என்பது உம் அவர் கருத்தாகலின், "கானது வொழிந்து நாடவர் பழித்துரை பூணது வாகக் கோணுத லின்றி" 'உத்தம னத்த னுடையா னடியே கினைந்துருகி மத்த மனத்தொடு மாலிவன் என்ன மனநினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட ஓரூர் திரிக்தெவருங் தத்தும் மனத்தன் பேசஎஞ் ஞான்றுகொல் சாவதுவே", என்னும் அடிகள் திருவாக்கு, அவர் பிறரிகழும் இகழ்ச் சியை எத்துணை விருப்பொடும் வரவேற்று நின்றாரென் பதை நன்கு விளக்குதல் காண்க. இனி, இவ்வேண்டுகோள் கைவரப்பெற்ற நமது அடிகள் தம்மை நாட்டிலுள்ளோர் பலரும் அமைச்சியத் பதவியை இழந்து ஒர் கோவணாண்டியாகத் திரிகின்றான் இப்பித்தன்' என்று எள்ளி நகையாடுதலையும், அவர் க்ளைத் தாம் "உலகவின்பத்தை நிலைபேறுடையதெனக் கருதிக் களியாட்டயருகின்ற 'பித்த ரிவர்' என அங்ங்ணம் செய்தலையும், நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப நாமு. மவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப' என்பதனாற் குறிப்பித்தருவி னார்; பின் அந்நிலை கடந்து மக்கள் பலர், தம்மைப் பித்தன்' என்று அஞ்சுதலைக்கண்ட நமது அடிகள் உயிர் கள் மாட்டு அஞ்சுதலையுஞ் செய்யாக் கழிபேரிரக்க முடைய ரா.கலின் இறைவனை நோக்கி, "மருளார் மனத்தோ ருன்மத்தன் வருமா லென்று இங்கெனைக் கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறங்ான் வேண்டுமே” - எனக் குறையிரந்து வேண்டினமையுங் காண்க. மேற்காட்டியவைகள் இஞ்ஞான்றுள்ள திருவாசகப் ப்திப்புகளில் முறையாகக் காணப்படுதலுங் கருதத்தக்கது. 104.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/104&oldid=852408" இலிருந்து மீள்விக்கப்பட்டது