பக்கம்:மணிவாசகர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலே அடாது எனினும் ஆட்கொண்டான் என்பது தோன்ற 'ஆட்கொண்டு என்றும், அங்ங்னம் ஆட்கொள்ளினும் பன்னிரண்டு ஆண்டுகள் வரையும் தம் தகுதியை நன்கு ஆராய்ந்து, தகுதியின்றேல் அதனை உளதாக்கி உபதேசிக்க வேண்டுமென்னும் அறிவு நூற் சட்டத்திற்கு மாறாக உடனே உபதேசித்தருளினான் என்பது தோன்ற அருளி' என்றும் கூறியருளினார். இஃது ஆண்டவன் அந்தணக்குலக் குரவனாய்ப் போந்து திருப்பெருந்துறையில் அடிகளை ஆட் கொண்டு திருவைந்தெழுத்தை முறைப்படி உபதேசித் தருளின வரலாற்றைக் குறிப்பதாகும்; இதற்குத் திருவாசகத் தின்கண் அகச்சான்றுகள் நிறைய உள்ளன; ஆண்டுக்காண்க. அழகனைத்தினுஞ் சிறந்த பிறவி நீங்குதலென்னும் பேரழகைத் தமக்கு அருளுமாறு தில்லைக்கு வரக்கடவாய் என்று பனித்தான் என்பது தோன்ற வண்ணப்பணித் தென்னை வாவென்ற' என்றார். தில்லைத் திருக்கூத்தைக் கண்டு யான் பிறவி நீங்கலாகிய பெருநலமுற்றேன்' என அடிகள் மிக விரிவாகக் கூறுதலைக் கண்டபத்திலும். "குலாப்பத் திலுங் காண்க தில்லைக்கு வா' என்றதை, "நாயி னேனை கலமலி தில்லையுட் கோல மார்திருப்.பொதுவினில் வருகென' என அடிகளே கூறுமாற்றால் அறிக. இதுவும் அவர் வர லாறு குறித்ததாகும். 'பணித்து வாவென்ற' என்பது 'வா வென்று பணித்த' என விகுதி பிரித்துக் கூட்டப்பட்டது. வான். கருணை என்றது இத்துணைக்கும் அவன் பேரருளே காரணம் என்பதை அறிவித்தற்கு, 'பொன் சுண்ண நீற் றற்கு என்பது, ஆண்டவன் ஆசிரியக் கோலத்துடன் வந்து ஆட்கொண்டருளிய ஞான்று காட்டிய திருவுருவத்தின்கண் ஈடுபட்ட அடிகள் இடையறாது அவ்வழகு வடிவத்தைத் தம் முள்ளத்தின்கண் வைத்து வழுத்துவதைக் குறிப்பதாகும். இவ்வுண்மையை, - . . 107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/107&oldid=852414" இலிருந்து மீள்விக்கப்பட்டது