பக்கம்:மணிவாசகர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யென்பதேயாகும்' என்பது காந்தியடிகள் திருவாக்கு. பொன், உவமையாகு பெயர்; அதனை நீற்றுக்கு அடையர்க் கினும் பொருந்தும். ஏகாரம், பிரிநிலை. - - சோலை முதலிய பலவிடங்களில் இன்னொலி எழுப்பிக் கொண்டு தன்னியல்பிற் பறந்து திரியும் வண்டினை நோக்கி " வண்டே நீ பல இடங்களிலும் சென்று பொருள் சேராத் புகழினையுடைய பலரையும் உன் இன்னிசையாற் பாடி வாணாளை வீணாளாக்காது, இடைவிருப்பனாகிய எம்பெரு மான் திருமுன் சென்று 'அவன் பொருள்சேர் புகழைப்பாடு வாயாக' என்பார், சென்று தாய் கோத்தும்பி என்றார்: என்னை? நிற்பனவும் இயங்குவனவுமாய் அனைத்தும் அவ் வவைகட்குரிய காரணங்களால் ஆண்டவனையே வழிபட்டு அழியாத இன்பத்தைப் பெறவேண்டும் என்னும் கனிந்த கருணையுடையவராகலின் என்க. பெரியார் கருத்து அதுவே யா குமென்பதை, "ஞால கின்புக ழேமிக வேண்டும்.தென் னால வாயி லுறையுமெம் மாதியே' என்னுந் தமிழ் மறையால் அறிக. அரசன் எவ்வொழுக் கத்தை மேல்கொண்டு நடக்கின்றானோ, அதனையே குடி களும் மேற்கொண்டு ஒழுகுதல் கண்கூடாகலானும் அரச' னெவ்வழி, குடிகளவ்வழி' என்பது பழமொழியாகலானும் ஏனைய வண்டுகளையும் அந்நெறிப்படுப்பான் அரச வண்டை நோக்கிக் கோத்தும்பீ' என விளித்தாரென்க. இனி, தலைவனைப் பிரிந்த தலைவி, அத்தலைலணி டத்துத் தூதுசெல்ல வண்டினை வேண்டுகிறாளெனவும் இத்திருப்பாட்டிற்கு உரைகாணலாம்; என்னை! 'இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை பயம்பெறுமே கம்பூவை பாங்கி-நயந்தகுயில், பேதை நெஞ்சங் தென்றல் பிரமரமீ ரைந்துமே தூதுரைத்து வாங்குக் தொடை” 109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/109&oldid=852418" இலிருந்து மீள்விக்கப்பட்டது