பக்கம்:மணிவாசகர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனத்தாதுவிடும் பத்துப் பொருள்களுள் வண்டும் ஒன்று என இரத்தினச் சுருக்கம் கூறுதலாலென்க. எனவே அன்பில்லாதவர்களில் யான்ே தலைசிறந்தேன் என அடிகள் கூறினாரெனக் கொள்ளுதலால் மற்றத் தொடர்களுடன் மாறுபடாமையும், பெரியாரிலக்கணத்தின் முரணாம்ையுங் காண்க:-இப்பொருளேதான் முன்னோர் க்ளுங் கொண்டனரென்பதற்கு, - 'கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற் கண்ணப்ப னொப்பதோ ரன்பதனைக்-கண்ணப்பர், தாமறிதல் காளத்தி யாரறித லல்லது.மற் நாரறியு மன்பன் றது", என்னுத் திருக்களிற்றுப்படியார் சான்றாதல் காண்க. இனி, அன்பின் ஊற்றுக்கு நிலைக்களனாக விளங்கிய தமது அடிகள் அவ்வன்பின் முடிந்த எல்லையாகிய கண்ணப் பரை எடுத்துக் காட்டியது அவ்வன்புநிலை ஒன்று பற்றியா? அன்றி. வேறு காரணங்களும் உள்வா? என்பதில் சிறிது கருத் தைச்செலுத்துவோமாக. 110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/110&oldid=852422" இலிருந்து மீள்விக்கப்பட்டது