பக்கம்:மணிவாசகர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்கீர தேவராலும், கல்லாட தேவராலும் இயற்றப்பட்டுள் ளன. அவற்றிலும் அவர் வரலாற்றுச் சுருக்கமே காணப் படுகின்றது. எனவே, அவர் வரலாறு தன்னைக் கூறு வார்க்கு ஆண்டவன் திருவடிக்கண் அன்பை விளைவிப்பதில், வல்லதெனக் கருதியே அப்பெரியாரனைவரும் அதனைக் கூறி மகிழ்ந்தாரென்பது உய்த்துணரத் தக்கதொன்றாகும் இதனை, வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர் கேளார்கொலந்தோ கிறிபட்டார்-கீழாடை அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுண்ணின்ற கண்ணப்பு ராவார் கதை' என்னும் நக்கீரர் நல்வாக்கும் வலியுறுத்துதல் காண்க இன்னும் தொண்டர் சீர்பரவுவார். அவர் இரண்டாவது நாள் வேட்டையைக் கூறத் தொடங்கி அன்பினாற் பரவச ராகிக் கூறிய, இவ்வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனியிப்பால் 'மைவண்ணக் கருங்குஞ்சி வனவேடர் பெருமானார் கைவண்ணச் சிலைவளைத்துக் காள்வேட்டை தனியாடிச் செய்வண்ணத் திறமொழிவேன் தீவினையின் திறமொழிவேன்' என்னும் ஒர் செய்யுளும் அக்கருத்தை ஆதரிப்பது காண்க கல்லாட தேவர் திருக்கண்ணப்ப தேவர் திருமறத்திறுதியில் "திருவேட்டுவர் தந்திருவடி கைதொழக் கருவேட்டுழல் வினைக் காரியம் கெடுமே" எனக் கூறி யது உம் இங்குக் கருதத்தக்கதாகும். 'தித்திக்குங், திண்ணப்ப னாஞ்சிறுபேர்" என நக்கீர தேவர் நவின்றது, அவர் அந்நாயனாரின் பிள்ளைத் திருநாமமாகிய திண்ணனார் என்பதில் ஈடு 114

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/114&oldid=852430" இலிருந்து மீள்விக்கப்பட்டது