பக்கம்:மணிவாசகர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவும் கூறினாராலோவெனில் அதற்கும் தம்மையறியாது அவர் வெற்றி ஒரோவழி வெளி வந்து விடுமென முன்னரே கூறப்பட்டதென்க. இணி கண்ணப்பர் இந்நிலையை அடைந்தவரென்பதை, "திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே அங்கணர் கருணை கூர்ந்த அருட்டிரு நோக்க மெய்தித் தங்கிய மலத்தின் முன்னைச் சார்புவிட் டகல நீங்கிப் பொங்கிய ஒளியின் கீழற் பொருவிலன்பு உருவ மானார்" (கண்ணப்ப நாயனார் புராணம்) எனவரும் செய்யுளால் அறிக. அவர் செய்தன அனைத்துந் தவம்ாயின வென்பதை, "அவனுடைய வடிவெல்லாம் நம்பக்க லன்பென்றும் அவனுடைய வறிவெல்லாம் நமையறியு மறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும் அவனுடைய கிலையில்வாறு அறிெேயன்று அருள்செய்வார்" "அவன்மனம் நமக்குக் கோயில் அவனுரை பலவும் o ஒத்தாம் அவன்முய றொழில்க ளெல்லாம் அறத்தொழில் ஐயமில்லை” (சீகாளத்தி புராணம்) எனச் சிவபிரான் சிவ கோசரியாரின் கனவிற் றோன்றிக் கூறியவாற்றால் அறிக. இன்னும் நமது அடிகள் இறைவனை நோக்கித் தம் விருப்பத்தைக் கூறுமுகத்தால், நின் திருவடியை என் இரண்டு கரங்களாலும் இறுகப் பிடித்து என் முடிமீதிருத் தித் தொழவும், உன் திருநாமங்களை என் வாயார வாழ்த்த வும், நின்னை நினைந்து என் மனம் அழலிற்பட்ட அரக்குப் போல உருகவும் எனது விருப்பம் என வேண்டி நிற். கின்றார். - - 117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/117&oldid=852436" இலிருந்து மீள்விக்கப்பட்டது