பக்கம்:மணிவாசகர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவே, அழுதடி யடைந்த அன்பர் என்பவர் மாணிக்க வாசகர் என்பது பெற்றாம்.பெறவே, முன்: ஐயுற்றார் சிலர் பின்னும் மற்றொரு ஐயத்திற்கு ஆளாவர். அது 'நமது அடிகள் ஏதமற்ற வாதவூரின் கண் போதவடிவினராய்த் தோன்றிய ஞான்று அவரை அரிய புதல்வராகப் பெறுதற்கு அளவிறந்த தவமாற்றிய அன்னையும் அத்தனும் திருவாதவூ, ரர் என்னும் பிள்ளைத் திருநாமம் இட்டதாகக் கேட்டோம். திருவாதவூரர் இளம் பருவத்திலேயே கலைகள் அனைத்தி லும் வல்லுநராய்ச் சிறந்து விளங்குதலை அறிஞர் வாயிலாக அறிந்த பாண்டி மன்னன் அவரைத் தன்னிடம் வரவழைத்து அவர் கல்வி, அறிவு ஒழுக்க முதலியவற்றைக்கண்டு வியந்து காவல்தேரை நடாத்தும் நமக்கு அறிவொழுக்கஞ்சான்ற இப்பெரியாரைத் துணைக்கோடல் அரியவற்றுளெல்லாம் அரிதாம் இன்றியமையாப் பெரும் பேறன்றோ? “தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல், வன்மையு ளெல்லாந்தலை' அல்லவா? நமது பாரம் அமைச்சரைக் கண்ணாகக்கொண்டு நடத்தப்பெறுவதன்றோ ? அவ்வமைச்சர் தாமும் அங்ங்ணம் 'அறனறிந்து மூத்த அறிவுடைய ராய்க் கிடைப்பின் அவர் நட்பைப் பேணாது விடுதல் பல்லோர் பகை கொளலிற் பத்தடுத்த தீமை" யுடையதன்றோ? எனக்கருதி அவர் நட்பின் பெருமையை உணர்ந்து அதனைக் கொள்ளும் திறனறிந்து, அவர் உவப்பனவாய பல வரிசைகளை நல்கித் தனக்கு முதலமைச்சராக அமைத்துக்கொண்ட காலத்தில் தென்னவன் பிரமராயர் என்னும் பெயர் அளித்ததாகவும் அறிந்தோம். பின் தென்னவன் பிரமராயர் அரசனுக்குக் கண்ணும் கவசமும் போலிருந்து காவல்தேரை நடாத்துவிக்குங் காலத்து, இளமையிலேயே கற்கவேண்டிய நூல்களைக் கற்று அதற்குத்தக ஒழுகியதன் பயனாக நித்த அநித்த வேறுபாட்டு ணர்வுடையவராய்த் துன்பப் பிறவியில் உவர்ப்பும் இன்பு வீட்டில் விருப்பும் ஓங்க, அவற்றை முறையே போக்கவும் ஆக்கவும் நல்ல நெறியினைத் தம் நூலுணர்வாலும், நுட்ப - بیبیسی 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/12&oldid=852441" இலிருந்து மீள்விக்கப்பட்டது