பக்கம்:மணிவாசகர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*அருளாதொழிந் தாலடி யேனையஞ் சேலென்பார்யார்' 'ஆவா வென்னாவிடி லென்னையஞ் சேலென்பாரோதான் 'அஞ்சேலென்ன ஆசைப்பட்டேன் கண்டாயம்மானே' எனப் பலவிடங்களிற் பாரித்துக் கூறி, 'உய்ஞ்சேன்எம் பெருமானே உடையானே வருகவென்று அஞ்சே லென்றருளியவாறு ஆர்பெறுவாரச்சோவே' என அவர் 'அஞ்சேல் என்றருளினமையுங் கூறியருளினார். இங்ங்னம், புலனைந்தும் பொறிகலங்கி நெறி மயங்கி யறிவழிந்திட்டைம் மேலுந்தி அமைந்த போதாக அஞ்சே லென்றருள் செய்யும் கூத்தபெருமானைக் குன்றவர் பெரு மான். - "குன்றிடை யெனக்கு வாய்த்த குலமணி விளக்கே யெங்தாய் உன்றழற் பசித னிப்ப வுறுசுவை யிறைச்சி கொண்டே' "உழுந்துருள் பொழுதின் மீள்வேன் ஒருகண மேனுங் . . . தாழேன் வழங்குறு கொடுவி லங்கு வருமென அஞ்சேல் ஐய எழுந்துமேல் வந்த தாயின் என்னைஒய் யெனக்கூவு' (சீகாளத்தி புராணம்) என்கின்றார். இந்நிகழ்ச்சிகளன்ைத்திற்கும் முதற் காரண மாயிருந்தது எது?அவருடைய அன்பன்றோ! அவரது அன்பு பரிணமித்த இந்நிகழ்ச்சிகளை அன்றி வேறு நிகழ்ச்சி அவரி டத்து இல்லாமையாலன்றோ அவர் அன்பின் வடிவமெனப் பட்டார். திருஞான சம்பந்தர் திருக்காளத்தியை வணங் கச் சென்ற தோற்றத்தைத் தம் கூர்த்த மதியால் முதலில் தமது உள்ளத்தில் எழுதிக் கொண்டு பின் நமக்கு விளக்கு கிறார் தொண்டர்சீர் பரவுவார்; அது, "தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுது ೧5THG தடஞ்சிலா தலசோபானத்தா லேறி - 122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/122&oldid=852447" இலிருந்து மீள்விக்கப்பட்டது