பக்கம்:மணிவாசகர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“நின்றன் வார்கழற் கன்பெனக்கு, கிரந்தரமாயருளாய்” "இடையறா வன்புனக்கென், ஊடகத்தே கின்றுருகத் தந்தருள்" "அன்பு கின் கழற்கணே, புணர்ப்பதாக" "மெய் கலந்த அன்பரன் அன்புஎனக்கு மாக வேண்டுமே வேண்டு கின் கழற் கனன்பு' "மெய்யன் புடையாய் பெறநான் வேண்டுமே” "தொண்ட னேற்கு முண்டாங் கொல் மிக்கவன்பே மேவுதலே' பெறவே வேண்டும் மெய்யன்பு' "அடியா ருனக்குள்ள வன்புக் தாராய்' என்பன, பேரன்பராகிய நமது பெரியார் இங்ங்னம் தமக்கு அன்பில்லையெனக் கருதி அவ்வன்பைப் பெறுதற்கு ஆண்ட வனிடங் குறையிரந்தமைக்குக் காரணம் என்னை? ஒருவாறு கற்பனைக் களஞ்சியமாகிய சிவப்பிரகாச அடிகள், 'அருங்கவி வாத ஆரனே முதலோ ரன்பிலேம் என்றது - - வேண்டி இரங்குதல் பொய்ம்மை யன்பிலே னெனயா னிரங்கலே - மெய்யெனக் கருளாய்" எனச் சோணசைலமாலையிற் கூறியவாறு நமது அடிகள் ஆண்டவன் திருமுன்னர்ப் பொய்தான் கூறினரோவெனின், 'அறுநூற்றைம்பத்தெட்டு பாடல்களடங்கிய திருவாசகமென் னும் ஒரு சிறு நூலின் கண் சற்றேறக்குறைய முப்பத்திரண்டு இடங்களில் பொய்யைக் கடிந்து கடிந்து கூறும் நம் பொய் யடிமையில்லாத புலவர் பெருமான்' 'பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே' எனத் தம்மாலழைக்கப்பட்ட பரம் பொருளின் முன் பொய் கூறினாரெனக் கருதுவதும், பொருந்துவதொன்றாகுமோ? ஆகாது; ஆகாது. 126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/126&oldid=852454" இலிருந்து மீள்விக்கப்பட்டது