பக்கம்:மணிவாசகர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி, அச்சிவப்பிரகாசனாரும் சில இல்லங்களிலுள்ள ஆண் மக்களுக்கு ஏற்ற பெற்றி பேசி அவர்களிடைச் சில் பொருளும் ஆங்குள்ள பெண் மக்களிடைப் பொருந்துமாறு பேசிப் பொருள் சிலவும் பெறுகின்ற சூழ்ச்சியுடையார் போலக் கடவுள் திருமுன்னர் வாதவூரடிகள் முதலாயினோர் 'அன்பில்லை என்று கூறுவது பொய்; யான் அஃதில்லை’ யென்பது மெய். ஆதலால், எனக்கு அருள் செய்வாயாக' எனக் கூறி நமது அழுதடி யடைந்த அன்பர் திருமுன்னர், ‘'வேண்டுகின் னடியார் மெய்யன் பெனக்கும் அருள்செய் சிவனே ய லந்தே னந்தோ முறையோ முறையோ விறையோ னேயென் நழுது செம்பொ னம்பலக் கூத்தன் அருளாற் பெற்ற அன்பினி லொருசிறி தடிய னேற்கும் அருளல் வேண்டும் நீயே கோடல் நின்னருட் பெருக்கிற் கேற்ற தன்றிள வேறுகங் தேறியைப் பரிமா மிசைவரப் புண்ணிய வித்தக! திருந்திய வேதச் சிரப்பொருண் முழுதும் பெருந்துறை யிடத்துப் பெருஞ்சீர்க் குருந்துறு நீழலிற் கொள்ளைகொண் டோயே’ எனவும், பகிர்மதி தவழும் பவளவார் சடையோன் பேரருள் பெற்றும் பெறாரி னழுங்கி நெஞ்சநெக் குருகி நிற்பை நீயே பேயேன் பெறாது பெற்றார் போலக் களிகூர்ந் துள்ளக் கவலை தீர்ங் தேனே அன்ன மாடு மகன்றுறைப் பொய்கை வாதவூ ரன்ப வாத லாலே தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் 'நெஞ்சத் தவலமில ரெனுஞ் செஞ்சொற் பொருளின் றேற்றறிந் தேனே' 127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/127&oldid=852456" இலிருந்து மீள்விக்கப்பட்டது