பக்கம்:மணிவாசகர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவும், நால்வர் நான்மணிமாலையில் கூறுவதனால் அவர் வாக்கும் நம்புதற்கில்லை; அன்றியும், பேரருள் பெற்றும் பெறாரினழுங்கி, நெஞ்சநெக்குருகி நிற்பை நீயே என்றத னால் அவர் தம்கருத்து இது வென்பதையும் தம்முடைய வெற்றி தமக்குத் தோன்றாதிருப்பது பெரியாரிலக்கணங் களில் ஒன்று" என மேலே காட்டியதையும் வெள்ளிடை மலை போல் விளக்கிவிட்டார். இனி அடிகள் அங்ங்ணங் கூறியதற்குக் காரணந்தான் என்னவென்பதை நோக்குவோமாக. - அடிகள், யாவர் க்கு மேலா மளவிலாச் சீருடையனாகிய ஆண்டவன் யாவர்க்குங் கீழாகிய தம்பொருட்டு அருட்டிரு மேனிகொண்ட ஆசிரியனாய்ப் போந்து யாவரும் பெற்றறி யாவின்பத்துள் வைத்ததையும்; பெருந்துறையிடத்துக் குருந்த நீழலிலிருந்து பார்த்த அருட்பார்வையால் காய்ந்த இரும்பு நீரைப் பருகுமாறு தமது சிவபோதத்தைப் பருகி, நீராயுருகவும், என் பெலா நெக்குருகவும் புன்புலால் யாக்கை புரை புரை கணியவும், அன்பினாலாவி யோடியாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகவும், ஊனையுமென்பையும் உருக் கித் தேனும் பாலுந் தீங்கன்னலு மமுதுமாய்த் தித்திக்கவும் செய்ததையும்; தமக்குக் கற்போலுந் தோன்றிய மனதைப் பிசைந்து கனியாக்கியதையும், வழிமறித்து, வழிமறுத்து அவனருளாரமுதம் ஊட்டியதையும்; தாம் மறுத்து மறுத்து ஓடியதையும்; அடித்தடித்து அக்காரந் தீற்றியதையும் நினைந்து நினைந்து ஆற்றாராகி, சொல்லுவதறியேன். என்றும், ஆற்றேன்' என்றும், தெரியேன்” என்றும் " 'தரியேன்” என்றும் கதறுவார்க்குப் பின்னும், தம் பொருட்டு அவன் நரிபரியாக்கிப் போந்த பான்மையும்,தத்து வங்கடந்த, தனது திருமுடியின் கண் அத்தத்துவங்கட்கெல் லாம் கீழாய மண்ணைச் சுமந்தது மமையாமல் பொன்மேனி புண்மேனியாமாறு பிரம்படி பட்டதும் நினைவில் வருமா னால் அப்பெரியாரின் திருவுள்ளம் என்ன பாடுபட்டிருக்கு மென்பதை, சில ஆண்டுகட்கு முன்னர் நமது நாட்டின்கண் தோன்றி மக்களுக்குச் சமரச சன்மார்க்கத்தைப் போதித்து, 128

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/128&oldid=852458" இலிருந்து மீள்விக்கப்பட்டது