பக்கம்:மணிவாசகர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வுணர்வாலும் ஆய்ந்தாய்ந்து வல்லார் பலரிடம் கேட்டுக் கேட்டும் அவையனைத்தும் நீர் வேட்கை யுற்றானொருவன் உவரி நீரை உண்டாலொப்ப மேலு மேலும் ஐயத்தை விளக் கக் கற்றாரை யான் வேண்டேன். கற்பனவு மினியமை யும்' என்ற கருத்துடையராய், - கரவிலாத பேரன்பினுக் கெளிவருங் கருணைக் குரவனாரரு ளன்றியிக் கொடிய வெம்பாசம் புரையில் கேள்வியாற் கழிப்பது புணையினா லன்றி. உரவு நீர்க்கடல் கரங்கொடு ந்ேதுவ தொக்கும்" ஆதலின் "நாதனாகிய தன்னையு மென்னையும் நல்கும் போதனாகிய குருபரன் வருவதெப்போது' என அகவினை ஆசிரியனை நாடுவதிலும், புறவினை மன்னன் கோல் கோணாது நடத்துவதிலும் வைத்து ஒழுகுங் காலத்தில் "வேண்டுவோர் வேண்டுவதே ஈவான் அருளால் ஒரு நாள் குதிரைப் பாதுகாவலாளர் சிலர் மன்னன் அவையினை யடைந்து வணங்கி 'அரசர் பெரும! நமது மதுரையிலுள்ள குதிரைகளுக்கு நேர்ந்த ஒரு நோயினால் இறந்துபட்டன பல; எஞ்சி நின்றன. சிலவே. அவையும் பெரிதும் முப்புடைய வும் எய்ப்புடையவுமாயுள்ளன. ஆதலின், நமது அரசியல் முறைக்கு வேண்டுங்குதிரைகள் எவ்வளவோ அத்துணையும் இன்றே வேண்டப் பெறுவன என்று கூற அதனைக் கேட்ட அரசர் பெருமான் அண்மையிலிருந்த அமைச்சர் பெருமானை நோக்கி வாதவூர் வள்ளால் நீவிர் இப்பொழுதே நமது பொருளறையினைத் திறந்து elēg பொருள்களை எடுத் துச்சென்று நமது ஆட்சிக்கு வேண்டும் குதிரைகள் எவ்வ ளவோ அவ்வளவையும் வாங்கிக் கொண்டு வருவீராக" என்று கூற அதற்குடன்பட்ட அடிகள் அவ்வாறே வேண்டிய பொருள்களை யெடுத்து யானைகள் மீதும் ஒட்டகங்கள் மீதும் ஏற்றி ஏவலாளருடன் முன்னே அனுப்பி, தாம் ஆலவாயண்ணலையும் அங்கயற்கண் ணம்மையையும் வண்ங்கி விடைபெற்றுக் கொண்டு திருப்பெருந் துறையை நோக்கிச் செல்லுங்கால் அவ்வெல்லையானது 'அடுத்திட 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/13&oldid=852463" இலிருந்து மீள்விக்கப்பட்டது