பக்கம்:மணிவாசகர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாகிய பகையால் வெல்லப்பட்ட பேடியாகிய) அடியேனது (துாய்தல்லாத) உள்ளம், இடி பட்டது= துன்பப்பட்டது, (ஆனால்) புவி நடையாம் துன்பு அட்ட வீரர் = உலகப் :பற்றாம் பகையைச் செற்று வென்ற வீரராகிய, வாதவூரர் தம் தூயநெஞ்சம் = அத்திருவாதவூரடிகளின் தூய்தான உள்ளமானது, (பார்த்த) போதில்= நேரிற்பார்த்த காலத்து, அந்தோ-ஐயோ என் பட்டதோ =எத்துணைத் துன்பம் அடைந்திருக்குமோ (அறியேன்) என்றவாறு. 'இன்று' என்றதனால் 'அன்று' என்பதும் கேட்ட" என்றதானாற் பார்த்த' என்பதும், புவிநடையாம் துன்பு அட்ட வீரர்' என்றதனால் உலகப் பற்றாகிய பகையால் வெல்லப்பட்ட பேடி என்பதும், தூய என்றதனால் துாய் தல்லாத! என்பதும் வருவித்துரைக்கப்பட்டன. வன்பு= வின்மை. அது இங்குத் தமக்கும் பிறர்க்கும் இரக்கமில்லாத மனங் காரணமாகச் செய்யப்படுந் தீவினைகளைக் குறித்து நின்றது. அவை மாபாதக முதலியன; விரிவைத் திருவிளை பாடற் புராணத்துட் காண்க; எனவே, வன்பட்ட கூடல்' என்றது மதுரையின் பெருமையைக் குறித்தவாறு வன் பட்ட எனக் கொண்டு பகைவரால் வேறற்கரிய வலிமை பொருந்திய எனவும் சமணர்கள் நாகம், பசு,யானை முதலிய வற்றை விடுத்துச் செய்த வலிமைகளனைத்தும் அழியப் பெற்ற எனவுங் கூறினும் பொருந்தும்; நாக முதலிய கதை களைப் புராணத்துட் காண்க. வான்பட்ட வையை என்றது வையையினது பெருக்கின் மிகுதி குறித்தவாறு வரம்பு "இட்ட என்றது கரையில்லானாகிய கடவுள் அடியார் "பொருட்டுக் கரை போகட்ட எளிமை குறித்தவாறு நின் பொன்பட்டமேனி என்றது அவன் கூலியாளாக வந்த அஞ் ஞான்று முள்ள அவன் திருமேனியழகில் ஈடுபட்டுக் கூறிய 'வாறு; என்னை கூலியாளாக வந்த அவன் வேலை செய் யாமல் விளையாடுவதைக் கண்ட ஏனைய கூலி ஆட்கள் கூற் றாக வைத்து:

  • 130
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/130&oldid=852465" இலிருந்து மீள்விக்கப்பட்டது