பக்கம்:மணிவாசகர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தேது மில்லாதென் பற்றறநான் பற்றிகின்ற மெய்த்தேவர் தேவுக்கே சென்று தாய் கோத்தும்பி" "பற்றாங்கவை அற்றீர் பற்றும் பற்றாங் கதுபற்றி" என வரூஉம் அடிகள் மணிமொழிகளானுமறிக, இனி, அவ்வுபாயத்தால் உலகப்பற்றை ஒழிக்க முயலுங் கால் நேரும் இன்னல்களை அல்லது போரை நமது அடி களாகிய வீரரே,

தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி

முனிவி லாததோர் பொருளது கருதலும் ஆறு கோடி மாயா சத்திகள் வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின’’ என அருளுகின்றார். இதனை நோக்குழி 1914ஆம் ஆண்டு தொடங்கி, 1918ஆம் ஆண்டுவரை நடந்த ஐரோப்பிய மகா யுத்தமும் இதற்கு இணையாகாதென்னலாம். என்னை? அப் போரின் கண்ணும் சில நூறாயிரக்கணக்கான போர் வீரர் களையும் அவர்களிற் பலர் ஒன்று கூடி நின்று, வரை யறுக்கப்பட்ட சில உபாயங்களாற் போர் செய்ததையுங் கேட்டோமேயன்றி, இங்ங்ணம் ஆறுகோடிபோர் வீரர் களென்றும், அவர்கள் தனித்தனி நின்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வி த மா ன மா ய ப் போ ர் செ ய் த ன ரென்றும் கேட்டோமில்லையாகலின். ஆகவே,புறக்கருவிகள் கொண்டு வெளிப் பகையை வெல்லுதனினும் அகக் கருவி கொண்டு உட்பகையை வேறல் அருமை என்பது பெற்றாம். இவ்வுண்மை கடவுள் காட்சியைக் குறிக்கோளாகக்கொண்டு அதற்குரிய நெறியிலொழுகும் பெரியார்க்கு நன்கு புலனாகு வதன்றி ஏனையோரால் அறியப்படுவதொன்றன்று; அந் நெறியின் கண் உறைத்து நின்றொழுகும் வாய்மை வடி வாகிய காந்தியடிகள் தமது சத்தியசோதனை யின் முடி புரையில், ஆத்மத் தூய்மை நெறி எளிதானதன்று; அது பெரிதுங் கஷ்டமான, செங்குத்தான பாதையாகும், ஒருவன் பூரண பரிசுத்தனாக வேண்டுமானால், மனோ வாக்குக் 132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/132&oldid=852469" இலிருந்து மீள்விக்கப்பட்டது