பக்கம்:மணிவாசகர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தப்பாமே தாம் பிடித்தது சலியா' என்பது முதலிய பல அடிகளால் அறிக. . இனி, வெளிப்போரிற் பல படைகளை வென்ற ஒருவன் எங்ங்ணம் வெளிநாட்டம் கொண்ட உலகினரால் வீரன்’ எனப்படுகின்றானோ அங்ங்னமே அகப்போரில் வெற்றி கொண்டவரை உள்நாட்டமுடைய சமய உலகத்தவர் வீரர்' என்பாராகலின், இப்பெரு வெற்றிகொண்ட நமது அடிகள் இராமலிங்க அடிகளால் புவிநடையாந் துன்பட்ட வீரர் எனப்பட்டார். பெரியபுராணத்துட் கூறப்படும் அடியார் களனைவரும் கடவுளை அடைதலைக் குறிக்கோளாகவைத்து. உலகியல்புக்கு ஒத்தனவும் ஒவ்வாதனவுமாகிய கொள்கை களை மேற்கொண்டு ஒழுகுங்கால் அக்கொள்கைகளை அழிக்கப் புறத்திலும் அகத்திலும் எழுந்த பகைகட்கு அஞ்சாது எதிர்த்து நின்று அவற்றால் தம் உயிருக்கு இறுதி நேரின் அதனையுங் கொடுத்துத் தங்கொள்கைகளை ஒம்பி ஆண்டவனடியை அடைந்தார்களாகலின் அவர்களின் குணம், செயல் முதலியவற்றைக் கூறுமிடத்து, "ஆரங் கண்டிகை யாடையுங் கந்தையே பார மீசன் பணியல தொன்றிலார் ஈர வன்பினர் யாதுங் குறைவிலார் வீர மென்னால் விளம்புத் தகையதோ' எனவும், 'வீரத்தா லெல்லார்க்குக் தனித்தனிவே றடியேயென்று ஆர்வத்தாற் றிருத்தொண்டத் தொகைப்பதிக . மருள்செய்தார்' எனவும் அருண்மொழித்தேவர் அறைந்து சென்றமையும் அறிக. இன்னும் அவர் மேற்கொண்டொழுகுங் கொள் கையே ஒரு வடிவெடுத்து வந்து ஒன்று என்னை விட்டு விடு, அல்லது உன் உயிரைக் கொடு' என்று கேட்பின் உடனே உயிரைக் கொடுத்துக் கொள்கையைப் போற்று' வார். அவர் உயிர் விடுத்தது புறவுலகத்திற்குத் தோல்வி போலத் தோன்றும். ஆனால், அக உலகத்திற்கு அஃது ஒரு 135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/135&oldid=852473" இலிருந்து மீள்விக்கப்பட்டது